நான் பெற்ற இன்பம்.. நீங்களும் பெற வேண்டும்… அஜித் கொடுத்த ஷாக் …

0
Follow on Google News

நடிகர் அஜித் சினிமாவை விட அதிகம் நேசிப்பது பைக் பயணத்தை, இதற்கு முன்பு லண்டன், திபெத் போன்ற நாடுகளுக்கு பைக் மூலம் உலக டூர் சென்று வந்த அஜித், சுமார் ஒன்றரை வருடம் பைக்கில் உலகில் பல இடங்களுக்கு சுற்றி வரவேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். ஏற்கனவே துணிவு படத்தின் படப்பிடிப்பின் இடையில் பைக் டூர் சென்ற அஜித், அந்த பயணத்தை முடித்து மீண்டும் துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் துணிவு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது அஜித் தன்னுடைய உலக டூர் பற்றி ஒரு திட்டமிடல் வைத்திருந்தார். அதில் அடுத்து லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த அஜித் 62 ஆவது படத்தை முடித்துவிட்டு சினிமாவுக்கு சிறிய இடைவேளை விட்டு தன்னுடைய ஒன்றரை வருடம் பைக் பயணத்தை தொடரவேண்டும் என திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இந்த ஒன்றரை வருட பைக் டூரை தொடர்ந்து செய்யாமல், இடையில் அடுத்தடுத்து படப்பிடிபில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த அஜித் நடிக்கும் படம் பல்வேறு பிரச்சனைகளால் அந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு மகிழ் திருமேனி கமிட்டாகி உள்ளார்.இதனால் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடை பெறவில்லை.

மேலும் மகிழ் திருமேனி முழு ஸ்கிரிப்ட் எதுவும் பணியை முடித்த பின்பு படப்பிடிப்பை தொடங்கலாம் என்பதால், இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வந்ததை தொடர்ந்து. ஏற்கனவே திட்டமிட்டு இருந்த பைக் டூரை தற்பொழுது தொடங்கிய நடிகர் அஜித். நீங்கள் ஸ்கிரிப்ட் எழுதி தயார் செய்யுங்கள் அதற்குள் நான் ஒரு டூர் சென்று விடுகிறேன் என நேபால் போன்ற பகுதிகளில் பைக் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் அஜித்.

இந்த நிலையில் அஜித், மகிழ் திருமேனி நடிக்கும் திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டு விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. அஜித் நடிக்கும் விட முயற்சி எப்போது தொடங்கும் ஏன் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்க, படம் குறித்து அறிவிப்பு ஏதும் இல்லாமல், மற்றொரு இன்ப அதிர்ச்சியை அஜித் அவருடைய ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

தன்னுடை மேனஜர் சுரேஷ் சந்திரா மூலம் அஜித் குமார் வெளியிட்ட அறிக்கையில், “இந்த மோற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்… “வாழ்க்கை ஓர் அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்.” மோட்டார் சைக்கிள்கள் மீதான எனது ஆர்வத்தை தொழிற்முறை முயற்சியாக மாற்றும் நோக்கில் ஏகே மோட்டோ ரைடு என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் மட்டுமல்லாமல் சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப் பயணங்களை வழங்கும். இதற்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப் பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல் திறனை உறுதி செய்து உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ‘ஏகே மோட்டர் ரைடு’ வழங்கும்.

தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபு பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்” என்று அஜித் தெரிவித்துள்ளார்.அந்த வகையில் உலகம் முழுவதும் பைக் பயணத்தில் தான் பெற்ற இன்பத்தை மற்ற பைக் ரைடர்ஸ்ம் பெற வேண்டும் என அஜித்ன் இந்த முயற்சி பைக் ரைடர்ஸ்க்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.