நடிகர் அஜித் நடித்த நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் தொடங்கியதில் இருந்து பல்வேறு தடைகள் காரணமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஒவ்வொரு முறையும் தாமதமாகி கொண்டிருந்தது. மேலும் படம் ரிலீஸ் ஆவதிலுமே பெரும் பிரச்சனைகள் இருந்தது. அந்த வகையில் பல தடைகளை தாண்டி எடுக்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வர இருக்கும் இந்த சூழலில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் நடந்த பல சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் அஜித் கார் ஓட்டுவது போன்ற ஒரு காட்சி, அந்த காரில் நடிகர் ஆரோவ் உடன் இருக்கிறார். அப்படி ஒரு காட்சியை படமாக்கி கொண்டிருந்த பொழுது அஜித் ஓட்டிச் சென்ற கார் உண்மையிலேயே விபத்துக்குள்ளாகிறது.
அதில் அஜித்துக்கும் அவர் உடன் இருந்த ஆரோவுக்கும் காயம் ஏற்படுகிறது, அந்த கார் விபத்து நடந்த உடனே அஜித் தனக்கு என்ன ஆனது என்று பொருள்படுத்தாமல், ஆரோவ் ஆர் யூ ஓகே, உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லை, நீங்கள் நல்லா தானே இருக்கீங்க என்று மிகவும் அக்கறையுடன் கேட்டு இருக்கிறார் அஜித். மேலும் ஆரோவிடம் நீங்க கண்டிப்பா உங்களுடைய உடம்பை ஒரு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்ற அஜித் ஆரோவிடம் தெரிவிக்கிறார்.
அதற்கு ஆரோவ்வும் ஓகே சார் என்று சென்று விடுகிறார், இருந்தாலும் ஆரோ அஜித் சொன்னது போன்று அவருடைய உடலை பரிசோதனை செய்யவில்லை, அஜித்துக்கு ஒரு டவுட், நிச்சயம் ஆரோ எக்ஸ்ரே எடுக்க சென்றிருக்க மாட்டார் என்று, நேரடியாக ஆரோவை சந்தித்து அரோ நீங்க சென்னை சென்று அங்கே எக்ஸ்ரே எடுக்கலாம் என்று நினைக்க வேண்டாம், என் கூட வாங்க என்று, வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில்,
ஆரோவை கையோடு அஜித் அழைத்துச் சென்று மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து அவரை கூடவே இருந்து கவனித்துள்ளார் அஜித். இந்நிலையில் ஆரோ மிகப்பெரிய நடிகர் கிடையாது இருந்தாலும் உச்சத்தில் இருக்கக்கூடிய அஜித் எந்த ஒரு ஆணவமும் இல்லாமல் ஆரோவை கவனிக்கிறார் என்றால், அவர் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு இயக்குனர் மூலம் அஜித்க்கு ஏற்பட்ட அவமானம் தான்.
அதாவது 1995 ஆம் ஆண்டு அந்த காலகட்டத்தில் மிகவும் உச்சத்தில் இருந்த ஒரு இயக்குனரின் பிறந்தநாளுக்கு அஜித்துக்கு அழைப்பு வந்தது. அஜித்தும் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல பொக்கையுடன் சென்றிருக்கிறார். அந்த இயக்குனர் ஒரு அறையில் மற்ற சினிமா பிரபலங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார், அந்த அறை பூட்டப்பட்டிருக்கிறது.
அஜித் அந்த அறைக்கு வெளியே காத்திருக்கிறார், சுமார் 2 மணி நேரம் காத்திருந்து அரை திறக்கப்படவில்லை, உதவி இயக்குனரிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்க என்கிறார் அஜித் தெரிவிக்கிறார், அந்த உதவி இயக்குனர் உள்ளே சென்று விட்டு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சென்று விடுகிறார். மீண்டும் காத்திருக்கிறார் அஜித். மீண்டும் சிலர் மணி நேரங்களில் உதவி இயக்குனரிடம் ரொம்ப நேரமா காத்திருக்கிறேன் என்ன என்று கேட்டு சொல்லுங்க என்று சொன்னதும்,
அந்த உதவி இயக்குனர் உள்ளே சென்று விட்டு திரும்பி, இன்று இயக்குனர் ரொம்ப பிஸியாக இருக்கிறார், உங்களை பார்க்க முடியாது வேறு ஒரு நாளில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார் , அப்போது அஜித் ஒரு முடிவு செய்கிறார், நாம் சினிமாவில் எந்த நிலைக்கு சென்றாலும் நம்மை போன்று வளர்ந்து வரும் நடிகரிடம் ஆணவத்துடன் நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று, அதனால் தான் அரோவ் போன்ற நடிகர்களிடம் மிகவும் அஜித் கனிவுடன் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.