பலே கில்லாடி அஜித்… சத்தமே இல்லாமல் பல கோடி லாபம் பார்க்கும் அஜித்…

0
Follow on Google News

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு, இந்த படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்துடன் நேரடியாக மோதியது. இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெற்றது, இருந்தாலும் துணிவு படம் மக்கள் மத்தியில் அதிக பாராட்டுகளை வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் வாரிசு படத்தை முடித்த உடனே லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் உள்ளது.

ஆனால் அஜித் அடுத்து தான் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தை இதுவரை தொடங்காமலேயே இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அஜித் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவருடைய அலுவலகத்தில் சத்தமே இல்லாமல் பல கோடிகள் சம்பாதிப்பதற்கான வேலைகளை அஜித் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடிகர் அஜித் பைக்கில் உலக பயணம் சென்றார். அப்போது அவருடைய கை, அவர் அணிந்திருக்கும் ஹெல்மெட் உட்பட மற்றும் அவர் பயணிக்கும் வாகனத்தில் பல பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டு, அஜித் மேற்கொண்ட பைக் பயணங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித்துடன் பயணித்தவர்களும் அஜித் மேற்கொண்ட பைக் பயணத்தை வீடியோவாக எடுத்துள்ளார்கள்

அஜித் மேற்கொண்ட பைக் பயணத்தின் மொத்த வீடியோவையும் அவருடைய அலுவலகத்தில் வைத்து எடிட்டிங் வேலையை அஜித்தின் உத்தரவின் பேரில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அஜித் மேற்கொண்ட பைக் பயணத்தின் வீடியோ காட்சிகள் எடிட்டிங் வேலைகள், அவருடைய அஜித்தின் அலுவலகத்திலேயே நடந்து வருவதற்கு முக்கிய காரணம், வெளியில் எடிட்டிங் வேலை நடந்தால் அந்த வீடியோ கிளிப் லீக் ஆகி விடும் என்பதற்காக தான் என கூறப்படுகிறது.

அஜித் மேற்கொண்ட பைக் பயணத்தின் வீடியோ காட்சியில் சின்ன கிளிப்பிங் கூட வெளியே சென்று விடக்கூடாது என்பதில் நவீன டெக்னலாஜியுடன் மிகப் பாதுகாப்பாக அஜித் அலுவலகத்தில் எடிட்டிங் அறையை தயார் செய்துள்ளார் அஜித் என்றும். அந்த வகையில் எடிட்டிங் அறையில் நுழைவாயில் கைரேகை வைத்தால் மட்டுமே அந்த கதவு திறக்கும் வகையில் அங்கே செட் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ எடிட்டரை தவிர்த்து வேறு யாருமே அந்த அறை உள்ளே செல்ல முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மிக பாதுகாப்புடன் அஜித் மேற்கொண்ட பைக் பயணத்தின் வீடியோ எடிட்டிங் வேலைகள் நடந்து வருவதால், இந்த வீடியோக்களை பிரபல ஓடிபி சேனல்களுக்கு விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் அஜித் துணிவு படத்தை முடித்துவிட்டு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் கூட அஜித் பைக் பயணம் மேற்கொண்ட வீடியோக்கள் மூலம் பல கோடிகள் கொடுத்து ஓடிடி தளங்கள் போட்டி போட்டு வாங்குவதற்கும் தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில், மேலும் அஜித் சமீபத்தில் தொடங்கியுள்ள ஏ கே மோட்டார் ரைடர்ஸ் நிறுவனத்தில் பைக் பயணம் மேற்கொள்கின்றவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் மிக ஆர்வத்துடன் ஏகே மோட்டோ ரைடர்ஸ்ல் கட்டணம் செலுத்தி பைக் பயணத்தை மேற்கொள்வதற்கான ஒரு யுக்தி என்று கூட கூறப்படுகிறது. அந்த வகையில் இனி அஜித் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட சத்தமே இல்லாமல் பல கோடிகளை சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை செய்து வருகிறார் என்கின்றது சினிமா வட்டாரங்கள்