நரம்பு மண்டலத்தில் அழுத்தம்.. டிஸ்கெக்டோமி சிகிச்சை செய்து கொண்ட நடிகர் அஜித்குமார்

0
Follow on Google News

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், முழுக்க முழுக்க தனது திறமை மற்றும் கடின உழைப்பு மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித். சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் அஜித் இதுவரை 61 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துக்கு சினிமாவை தவிர்த்து மற்றொன்றின் மீதும் தீரா காதல் உண்டு என்றால் அது பைக் தான். அவருக்கு பைக் ரேஸ், கார் ரேஸ் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

எந்த அளவிற்கு என்றால், அவர் நடிக்கும் படங்களில் பைக் ரேஸ், கார் ரேஸ் மற்றும் பைக் ஸ்டண்ட் போன்ற காட்சிகள் இடம் பெற்றால், அவற்றுக்கு டூப் போடாமல் தானே ஒரிஜினலாக ஸ்டண்ட் செய்து கொடுப்பாராம்.
பைக் ஸ்டண்ட் என்பது சாதாரண விஷயம் அல்ல. பொதுவாக பைக்கில் வீலிங் செய்கிறேன் என்று முறையான பயிற்சி இல்லாமல் ஓட்டினாலே விபத்து ஏற்பட்டு பலத்த காயங்கள் ஏற்படும்.

பைக் ஸ்டண்ட் என்று வரும்போது, மிகவும் ஆபத்தான சாகசங்கள் செய்ய வேண்டும். அப்படி பைக்கில் சாகசம் காட்டும் போது, “கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்”என்பது போல சிறிய பிழை ஏற்பட்டால் கூட உயிருக்கே உலை வைத்து விடும். அத்தகைய ஆபத்தான பைக் ஸ்டண்ட் என்று தெரிந்தாலும் கூட, நடிகர் அஜித் தானே முன்வந்து காட்சிக்குத் தேவையானது போல ஸ்டண்ட் செய்து கொடுத்து அசத்தி விடுவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக வலிமை படத்தின் படப்பிடிப்பில் கூட ஆபத்தான ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்ட போது, டூப் ஏதும் இல்லாமல் அஜித்தே அந்த ஸ்டண்ட் காட்சியை செய்த வீடியோ கூட அந்த சமயத்தில் இணையதளங்களில் ட்ரெண்டானது. அப்போது துரதிஷ்டவசமாக விபத்து ஏற்பட்டு அஜித்துக்கு காயங்கள் ஏற்பட்டது.
அந்த விபத்துக்கு பிறகு அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த சிகிச்சை பற்றி அஜித்தின் எலும்பியல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் நரேஷ் பத்மநாதன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், அஜித்தின் முதுகெலும்பில் டிஸ்டக்டோமி அறுவை சிகிச்சை இதுவரை இரண்டு ஸ்டேஜ்களாக செய்யப்பட்டுள்ளது. அந்த சிகிச்சையில் அவரது நரம்பு மண்டலத்தில் அழுத்திக் கொண்டிருந்த ஒரு எலும்பும் அகற்றப்பட்டுள்ளது.

மேலும் விபத்தின் போது அவரது கீழ் முதுகில் ஏற்பட்ட எலும்பு முறிவு அவருக்கு கை கால் வராமல் பக்கவாதத்திற்கு கொண்டு செல்லும் அளவிற்கு முறிவு ஏற்பட்டிருந்தது.” என்று கூறியுள்ளார். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் படத்தில் நடித்து வரும் அஜித் அவரது ரசிகர்களுக்கு சொல்ல வரும் விஷயம் ஒன்றுதான்.” எத்தனை முறை விழுந்தாலும் அதிலிருந்து உங்களால் மீண்டு வர முடியும் என்பது தான்” என்று அந்த மருத்துவர் கூறியுள்ளார்.

விபத்தினால் இவ்வளவு மோசமான விளைவுகளை சந்தித்த நடிகர் அஜித், இன்றும் உயிருடன் நடமாடுகிறார் என்றால், அது அவருக்கு தக்க சமயத்தில் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்களால் தான் என்பது அவர் கூறியதிலிருந்து தெரிகிறது. சமீபத்தில் கூட மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட அஜித்துக்கு மைனஸ் சர்ஜரி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், ஏற்கனவே கமிட்டாகி இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஷூட்டிங்கின் போது விபத்துக்கள் ஏற்படும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் நடிகர் அஜித் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து அதிக முறை இப்படி விபத்தில் சிக்கியிருக்கிறார். இதற்கு முன்பு படப்பிடிப்பில் அவருக்கு ஏற்பட்ட விபத்துகளால் முதுகுத்தண்டு தோள்பட்டை முழங்கால் கை என் உடம்பின் பெரும்பாலான பகுதிகளில் பலமுறை அடிபட்டு நிறைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இப்படி பல முறை விபத்தில் சிக்கியதால்தான் அடுத்தடுத்து நிறைய அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறார் அஜித்.