நடிகர் அஜித் குமார் சமீபத்தில் துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் மேற்கண்ட போது அவருடைய கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் எந்த ஒரு சிறு காயம் இல்லாமல் மிக சாதாரணமாக அஜித் அந்த காரில் இருந்து வெளியே வந்தாலும். ஆனால் இந்த விபத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏன் இவருக்கு இந்த வேண்டாத வேலை என பதற்றம் தான் அடைந்தார்கள்.
நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் அந்த காரை மீண்டும் உடனே ஓட்ட முடியாது, உடனே அந்த காரை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, அடுத்து வேறு ஒரு காரை அஜித் அந்த கார் ரேஸில் பயிற்சியின் போதும், கார் ரேஸ் போட்டியின் போதும் பயன்படுத்த முடியும், அப்படியானால் எத்தனை கார்கள் ஒவ்வொரு போட்டியாளருக்கும் தயாராக இருக்கும் என்று கணக்கிட்டு பார்க்கலாம்.
துபாயில் நடக்கும் கார் ரேஸில் அஜித்துக்கு என தனியாக பயிற்சி கொடுக்க ஒரு பயிற்சியாளர், மேலும் இது ஒரு குழுவாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது. துபாயில் நடக்கும் இந்த கார் ரேஸ் பந்தயத்திற்காக இந்தியாவிலிருந்து, பல மாநிலங்களில் உள்ள கார் ரேசர்களை அஜித் துபாய்க்கு அழைத்துச் சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் கார் ரேசர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அஜித் இப்படி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அஜித் வலிமை படத்தில் நடித்த காட்சிகள் முகத்தில் தொப்பை விழுந்து, ஒரு உடல் கட்டமைப்பு இல்லாமல், அவர் அந்த படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்தது போன்று இருந்தது.
ஆனால் சமீபத்தில் அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி பலரை ஷாக் அடைய செய்தது, மிகவும் உடல் இளைத்து காணப்பட்டார். இது அஜித் நடிக்கும் படத்திற்காக உடல் எடையை குறைத்தார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், அதெல்லாம் உண்மை இல்லை என்று தகவல் வெளியாகின்றது. பொதுவாக கார் ரேஸில் இருப்பவர்கள் உடல் எடை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே இருக்க முடியும்.
அதாவது அந்த காருக்கு ஏற்ற மாதிரி அந்த உடல் எடை இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட சில கார்களை ஓட்ட முடியும் என்கிறார்கள் கார் ரேஸ் பற்றி நன்கு அறிந்தவர்கள். அந்த வகையில் துபாயில் நடைபெற இருக்கும் கார் ரேசுக்காகத்தான் அஜித் அவருடைய உடல் எடையை குறைத்ததாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது. அந்த அளவுக்கு சினிமாவை விட கார் ரேஸ் தான் அதிகம் அஜித் விரும்புவதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில் அஜித் தற்பொழுது குட் பேட் அட்லி, விடா முயற்சி ஆகிய இரண்டு படங்களையும் நடித்து முடித்து விட்டு, துபாயில் கார் ரேஸில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நிலையில், அடுத்த அஜித் நடிக்கும் படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை, மேலும் அவர் எந்த ஒரு படத்திலும் இன்னும் கமிட் ஆகவில்லை,
இந்த நிலையில் அஜித் தற்பொழுது துபாயில் நடக்கும் கார் ரேஸை முடித்துவிட்டு இந்தியா திரும்புவதற்கு ஆறு முதல் ஏழு மாதங்கள் ஆகும், அதன் பின்பு அவர் யார் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்யவேண்டும், அந்த படப்பிடிப்பு எவ்வளவு நாள் நடக்கும் என்றெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகுறது. அதே நேரத்தில் துபாய் கார் ரேஸ் வெற்றிகரமாக அஜித்துக்கு அமைந்துவிட்டால். ஒட்டுமொத்த சினிமாவுக்கும் குட் பை சொல்லி முழுமையாக தன்னை கார் ரேஸில் ஈடுபடுத்த இருப்பதாகவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.