நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தது. ஒரு வழியாக அந்த படம் முற்றிலும் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நடந்த பொங்கல் பண்டிகைக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு, பின்பு தள்ளி வைக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியதில் தொடர்ந்து, வெளியாவது வரை பல்வேறு தடைகளையும் சிக்கலையும் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க இடையே திடீரென்று நடிகர் அஜித் பைக்கை எடுத்துக் கொண்டு வேர்ல்ட் டூர் சென்ற வீடியோவும் புகைப்படமும் வெளியானது. மறுபக்கம் அஜித் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் என்கின்ற செய்தியும் வெளியானது.
மேலும் அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பாதியில், குட் பேட் அட்லி என்கின்ற படத்தில் கமிட் ஆகி, அந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வந்தார். அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதத்திற்கு காரணம் அஜித்தான் என்று ஒரு பேச்சு சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அஜர்பைஜானில் எடுக்கப்பட்டு வந்த விடாமுயற்சி படம் இறுதியாக கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டுமே எடுக்கப்படாமல் இருந்திருக்கிறது.
மேலும் 18 நாட்கள் படப்பிடிப்பு நடந்து இருந்தால் அஜர்பைஜானில் கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டு முடித்திருக்கும். அப்படி ஒரு சுழலில்ம் இந்த காட்சிகளை சென்னையில் செட் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று அஜித் சொன்னதாகவும், ஆனால் இயக்குனர் மகில் திருமேனி அஜர்பைஜானில் தான் எடுக்க வேண்டும் என்று சொன்னபோது, அதற்கு அஜித் பிடிவாதமாக சென்னையில் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருக்கிறார்.
இதனால் அஜித்துக்கும் – மகிழ் திருமணிக்கும் இடையில் சண்டையே ஏற்பட்டது, இதனால் தான் நினைத்தபடி இந்த படம் முழுமையாக வருமா என்கின்ற சந்தேகம் மகிழ்திருமேனிக்கு எழுந்ததாகவும், அதாவது நடிகர் அஜித் இதற்கு முன்பு பைக்கில் வேர்ல்ட் டூர் சென்ற போது, அவருக்கு அஜர்பைஜான் பிடித்திருக்கிறது. அதனாலே அஜித் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அஜித் தான் இயக்குனரிடம் ஆரம்பத்தில் தெரிவித்ததாகவும்.
ஆனால் அவர் இஷ்டத்துக்கு சென்னையில் செட் போட்டு எடுக்கலாம் என்றதும், மகிழ் திருமேனி – அஜித் இருவருக்கும் இடையில் வார்த்தை சண்டை நடந்ததாகவும், மேலும் இது குறித்து மகிழ் திருமேனி அவருடைய நெருங்கிய வட்டாரங்களில் தேவையில்லாமல், அஜித் படத்தில் சிக்கி கொண்டேன் என தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தியதாக சினிமா பத்திரிகையாளர் என்கிற போர்வையில் சிலர் பேசி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அஜித் உடனான சண்டை குறித்து பேசிய மகிழ் திருமேனி, அஜித் சாருக்கும் எனக்கு சண்டை என்று பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரியாவே பேசுகிறார்கள், எதற்காக இப்படி பொய் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அப்படி பேசுகின்றவர்கள் எனக்கும் அஜித் சாருக்கும் சண்டை என்று நிரூபித்து விட்டால், நான் சினிமாவை விட்டு விலகுகிறேன் என, நடிகர் அஜித்துக்கும் இயக்குனர் மகில் திருமேனிக்கும் சண்டே என்று பேசியவர்களுக்கு சவால் விடுத்துள்ளார் திருமேனி.
ஆனால் இந்த இந்த பேட்டியை பார்த்த ஒரு தரப்பினர், அஜித் – மகிழ் திருமேனி இடையில் சன்டை நடப்பதற்கு வாய்ப்பில்லை, அஜித் என்கிற மிக பெரிய நட்சதிர நடிகருடன் மகிழ் திருமேனி சண்டை போடும் அளவுக்கு நடந்து கொள்ளமாட்டார், அதே நேரத்தில் சினிமாவில் இயக்குனரை சொல்வதை கேட்க கூடியவர் தான் அஜித் என்றும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.