H.வினோத் மீது செம்ம டென்ஷனில் அஜித்… பல முறை சொல்லியும் கேட்கவில்லை..

0
Follow on Google News

கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சினிமா பாராட்டு விழா நடைபெற்றது. பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளாத நடிகர் அஜித்குமார், கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியது தமிழக அரசியலில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித் மேடையில் பேசுகையில், இதுபோன்ற பாராட்டு விழா நடக்கும்பொழுது இண்டஸ்ட்ரியல் பொறுப்பில் இருக்கும் சிலர் எங்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு வரவழைக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் வருகிறோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம், சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக இணைக்காதீர்கள் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மேடையில் அஜித் பேசிய போது கருணாநிதி அருகில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்.

இப்படி அரசியலையும் சினிமாவையும் ஒன்று இணைக்க வேண்டாம் என்று அப்போதைய ஆளுமையான தலைவர் முன்பே துணிந்து பேசிய அஜீத் பொதுவாக எந்த ஒரு அரசியல் கருத்தும் தெரிவிப்பது கிடையாது. மேலும் அரசியல் சர்ச்சைகளிலும் அவர் சிக்குவது கிடையாது. தான் நடிக்கும் சினிமாவில் எந்த ஒரு காரணத்திற்காகவும் அரசியல் சார்ந்த கருத்து இடம் பெற்றிடக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்பட கூடியவர் அஜித்.

அந்த வகையில் தற்பொழுது அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கம் படத்தின் ஸ்கிரிப்ட்டை அஜித் படித்தபோது, அதில் பல அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்ததை பார்த்து, உடனே விக்னேஷ் சிவனை அழைத்து எந்த ஒரு காரணத்திற்காகவும் என்னுடைய படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இருக்கக்கூடாது என கண்டிஷன் போட்டு ஸ்கிரிப்டவே மாத்தி அமைக்க செய்தவர் அஜித்குமார் என்று கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி அஜித்தை மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம், ரவீந்தர் இது தமிழ்நாடு உங்கள் வேலையை இங்கே காட்டாதீங்க என சமுத்திரக்கனி பேசும் வசனம் இன்றைய அரசியல் சூழலுக்கு ஒத்துப் போவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் ரவி ஏற்படுத்தியுள்ள தமிழ்நாடு – தமிழகம் சர்ச்சைக்கு மத்தியில் மத்திய அரசு அதிகாரி ரவீந்தர் என்கின்ற கதாபாத்திரத்தை எதிர்த்து சமுத்திரக்கனி பேசியுள்ள இந்த வசனம் வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளதால், சமுத்திரக்கனி பேசும் சர்ச்சை கூறிய காட்சிக்கும் ஆளுங்கட்சியை சேர்ந்த ரெட் ஜீன்ஸ் மூவிஸ்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

இந்தநிலையில் அரசியல் சார்ந்து சர்ச்சைக்குரிய காட்சி தன்னுடைய படத்தில் இடம்பெற்றுள்ளதால் இயக்குனர் H.வினோத் மீது செம்ம டென்ஷனில் இருக்கும் நடிகர் அஜித்குமார். ஏற்கனவே தான் நடிக்கும் படத்தில் இயக்குனர்களிடம் எந்த ஒரு காரணத்திற்காகவும் அரசியல் சார்ந்த வசனம் இருக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டும், இப்படி ஒரு வசனம் எப்படி இடம்பெற்றது என்று இயக்குனர் எச் வினோத் மீது செம்ம கடுப்பில் அஜித் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.