எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றிய அஜித்… கடும் சோகத்தில் அஜித் ரசிகர்கள்..!

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் மற்ற நடிகர்களை விட சற்று வித்தியாசமானவர், ரசிகர்களை தன்னுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் மத்தியில், தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்து அவரை பின்பற்றும் ரசிகர்கள் தன்னால் அவர்களுடைய வாழ்க்கையின் எதிர்காலத்தை இழந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு அதிரடியை காட்டியவர் அஜித் குமார்.

நான் சினிமாவில் நடிக்கின்றேன், என்னுடைய படம் பிடித்திருந்தால் பாருங்கள், அதே நேரத்தில் உங்களுடைய குடும்பத்தையும் பார்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு. ஆகையால் என்னை பின்பற்றி எனக்காக நேரத்தை செலவிட்டு உங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடாதீர்கள், என்பதற்காக தான் அஜித் தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத அஜித். தான் நடிக்கும் படத்தின் ஒப்பந்தம் செய்யும் போதே படத்தின் ப்ரோமோஷன் போன்ற நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள மாட்டேன் என்கின்ற உத்தரவாதத்துடன் தான் அந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லுவார். இந்த நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என்கின்ற ஒரு தகவல் பரவலாக வைரல் ஆனது.

இதனால் அஜித் ரசிகர்கள் கடும் கொண்டாட்டத்தில், அஜித்தை நேரில் காண ஆவலோடு மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர், ஆனால் தன்னுடைய மேனேஜர் மூலம் நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்து தான் துணிவு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தி படுத்து தன்னுடைய ரசிகர்களின் ஏமாற்றி விட்டார் அஜித்.

error: Content is protected !!