நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் இயக்குனர் மகில் திருமேனி அந்தப் படத்தில் கமிட் ஆகுவதற்கு முன்பு, வேறு ஒரு நடிகருக்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார், அப்பொழுது நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, மகிழ் திருமேனியை தொடர்பு கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டவர்,
அடுத்து அஜித் சாரை வைத்து நீங்கள் தான் படம் பண்ண போறீங்க, விரைவில் அஜித் சார் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வார் என்று தெரிவித்திருக்கிறார் சுரேஷ் சந்திரா. இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் மகிழ் திருமேனியை தொடர்பு கொண்ட அஜித், அடுத்து நம்ம தான் சேர்ந்து படம் பண்ண போறோம், என்னை கண்மூடித்தனமாக நம்புங்கள், உங்களை கைவிடமாட்டேன் என்று அஜித் மகிழ்திருமேனிக்கு உறுதி கொடுத்துள்ளார் அஜித்.

மேலும் விரைவில் லண்டன் சென்று லைக்கா நிறுவனத்தை சந்திக்க வேண்டும் என்றும் மகிழ் திருமேனியிடம் தெரிவித்திருக்கிறார் அஜித். இதனை தொடர்ந்து அஜித்தை முதன் முதலில் லண்டனில் சந்திக்கப் போகிறோம் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மகிழ் திருமணி லண்டன் சென்று இருக்கிறார்.
மகிழ் திருமேனியை ஆற தழுவி கட்டி, ஏதோ பல வருடங்கள் பழகியவர் போன்று மகிழ் திருமேனியை அரவணைத்திருக்கிறார் அஜித் குமார். மேலும் விடாமுயற்சி என்கின்ற பெயரை கூட அஜித்தான் தேர்வு செய்திருக்கிறார். அதாவது எப்படி அந்த படத்திற்கு விடாமுயற்சி என்கிற பெயர் அமைந்ததோ, அந்த படம் தொடங்கியதில் இருந்து பல்வேறு தடைகள் ஏற்பட்டு விடாமுயற்சியில்தான் இந்த அளவுக்கு படம் முடிவடைந்து இருக்கிறது.
மேலும் இந்த படம் தாமதத்திற்கு அஜித் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையில் என கூறப்படும் நிலையில், இந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா தொடர்ந்து, இந்தியன் 2, ரோபோ 2, சந்திரமுகி 2 என அவர்கள் தயாரிப்பில் வெளியான அனைத்து தோல்வி அடைந்து, விடாமுயற்சி படத்தை பண்ணுவதற்கு மிகப்பெரிய சிரமத்தில் இருந்து வந்துள்ளார்கள்
இருந்தாலும் நடிகர் அஜித்துக்கு ஒரு பாலிசி உண்டு தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களை எந்த விதத்திலும் கைவிடமாட்டார், அதே நேரத்தில் இயக்குனர் மகில் திருமேனிக்கு இதற்கு முன்பு நாம் எடுத்த படங்கள் சொன்ன தேதிக்குள் முடித்து விட்டோம், ஆனால் இந்த விடாமுயற்சி படம் என்னால தான் தாமதமாகிறது என்று என்னை சுற்றி இருக்கிறவர்கள் இப்படி பேசுகிறார்களே என்று அஜித்திடம் வருத்தப்பட்டு இருக்கிறார் மகிழ் திருமேனி.
அதற்கு அஜித் உங்களை சுற்றி இருக்கிறவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டாம், அவர்கள் நாளை உங்களை பாராட்டலாம் என்று அஜித் தெரிவித்திருக்கிறார். மேலும் சிறுத்தை சிவா எச் வினோத் போன்ற எனக்கு பிடித்தமான இயக்குனர்களிடம் என்னை நம்பியவர்கள் உடன் மேலும் மேலும் அடுத்தடுத்து படங்கள் பண்ணினேன்.
அதே மாதிரி அடுத்தடுத்து உங்களுடைய இயக்கத்தில் நான் படம் பண்ணுவேன் என்று மகிழ் திருமேனிக்கு நம்பிக்கை ஊட்டி இருக்கிறார் அஜித். இப்படி தயாரிப்பாளர்களிடம் நேர்மையாக இருக்கும் அஜித்திடம் தயாரிப்பாளர்கள் நேர்மையாக இருந்ததில்லை, காரணம் அஜித் ஷாலினி திருமணத்தின்போ பின்பு அஜித்துக்கு ஒரு ஆக்சிடென்ட் நடக்கிறது.
அந்த காலகட்டத்தில் இனி அஜித் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது என அவரிடம் அட்வான்ஸ் தொகையை கொடுத்த மூன்று தயாரிப்பாளர்கள் அஜித்திடம் திரும்பி கேட்டு வாங்கி சென்றார்கள். ஆனால் அப்போது அஜித் சொன்ன வார்த்தை இதற்கு முன்பும் எனக்கு பல தடவை விபத்து நடந்திருக்கிறது, திரும்ப வந்து சினிமாவில் மீண்டு எழுந்தவன் தான் மீண்டும் திரும்ப வருவேன் என்று சொல்லி இருக்கிறார் அஜித்.