நடிகர் அஜித் இன்று பல கோடிகள் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்து, உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்யும் அளவுக்கு வசதி படைத்தவராக வருவதற்கும் காரணமாக இருந்தவர்கள் தமிழக மக்கள். இப்படி அஜித்தை தலையில் வைத்து தல தல என்று கொண்டாடிய தமிழக மக்கள் தான் அவருக்கு மிகப்பெரிய வாழ்க்கையும் பெயர் புகழ் செல்வாக்கையும் கொடுத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.
ஆனால் அஜித் நினைத்தால் கர்நாடகாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் போன்று இலவசமாக கல்வி கற்றுக் கொடுப்பதற்கு இங்கே தமிழகத்தில் ஒரு பள்ளியை கட்டலாம், மருத்துவமனையை கட்டலாம். இப்படி ஏழை எளிய மக்கள்கள் பயன்படும் வகையில் அஜித் செய்தால் அவருக்கு மட்டுமல்ல அதனால் பயனடையும் பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் செய்யாமல் ஏகே மோட்டோ ரைடு என்கின்ற பெயரில் பணக்காரர்களை மகிழ்ச்சி படுத்தும் விதத்திலும் மேலும் வியாபார நோக்கில் தான் அஜித் ஏகே மோட்டோ ரைடு என்கிற நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
ஏ கே ரைட் மோட்டோ நிறுவனத்தின் மூலம் அஜித் போன்று பைக் பயணம் செல்ல ஆசைப்படுகின்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கப் போகிறது என அந்த நிறுவனம் தெரிவித்தது, ஆனால் இந்த நிறுவனத்தின் பின்னணியில் மிகப்பெரிய வியாபார யுக்தி உள்ளது என்கின்றனர் தொழில்துறை நிபுணர்கள். அதாவது வசதி படைத்தவர்கள் பைக் பயணம் செல்லும் பொழுது விலை உயர்ந்த பைக்கில் தான் பயணம் செய்ய முடியும்,
இதனால் வசதி படைத்தவர்கள் அதிக ஆர்வத்துடன் விலை உயர்ந்த பைக்கை வாங்குவது மூலம் குறிப்பிட்ட சில பைக்கின் வியாபாரம் அதிகரிக்க செய்யவே, குறிப்பிட்ட சில பைக் நிறுவனங்கள் ஏகே மோட்டோ ரைடுக்கு ஸ்பொன்சர் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் தொடங்கிய ஏகே மோட்டார் நிறுவனத்தில் அஜித் உடன் பைக்கில் பயணம் செய்யலாம் என்கிற ஆசையில்,வெளிநாட்டில் இருந்து ஒரு கோடீஸ்வரர் பல லட்சம் செலவு செய்து வந்துள்ளார்.
மேலும் அவர் வெளிநாட்டில் இருந்து வருவதற்க்கு முன்பு தன்னுடைய நண்பர்களிடம் நான் அஜித் உடன் பயணம் செய்ய போகிறேன், அவருடன் பயணிக்கும் வீடியோ, புகைப்படங்களை உங்களுக்கு அனுப்புகிறேன் என செம்ம குஷியில்அங்கிருந்த வந்தவர், கடைசி வரை அஜித்தை பார்க்க முடியாததால் பெரும் ஏமாற்றத்தில் செலவு செய்த பணம் முழுவது வீணாகி போனதே என கண்ணீருடன் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பணக்காரர்களை குறி வைத்து தான் இந்த ஏகே மோட்டோ ரைடு நிறுவனத்தை அஜித் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை பெரிதாக ஏதும் பணக்காரர்கள் மத்தியில் கூட வரவேற்பு இல்லை இதற்கு காரணம், அஜித் தொடங்கிய இந்த நிறுவனத்தில் அஜித் வரமாட்டாராம், அட எதுக்குப்பா நம்ம லட்ச கணக்கில் செலவு செய்து போக வேண்டும் என யாரும் அஜித்ன் தொடங்கிய ஏகே மோட்டார்ஸ்ல் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் சினிமாவில் போன்று ஆடியோ வெளியீட்டுக்கு வரமாட்டேன், படத்தின் ப்ரோமோஷன்க்கு வரமாட்டேன் என கெத்து கட்டினால், ஏகே மோட்டார் நிறுவனத்தை இழுத்து மூடி விட வேண்டும் என்பதை உணர்ந்து, அஜித் நேரடியாக ஏகே மோட்டார்ஸ் நிறுவனத்தை ப்ரோமொட் செய்யும் விதத்தில்,அவரே அங்கிருப்பவர்கள் பைக் ஓட்ட கற்று தருவது, பைக் பயணம் செய்யும் இடத்தில் பிரியாணி கிண்டுவது, என தன் கைவசம் இருக்கும் அத்தனை வித்தைகளையும் காண்பித்து ஏகே மோட்டார் நிறுவனத்தை அடி மட்டத்தில் இறங்கி ப்ரோமோட் செய்து வருகிறார். மேலும் அஜித் பைக் பயணத்தில் காட்டும் ஆர்வத்தை, சினிமாவில் நடிப்பதில் கட்டினால், விரைந்து அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வந்து, அஜித்துக்கு கோடிகளில் சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர்களும் நிம்மதி பெரும் மூச்சு விடுவார்கள் என்பதை அஜித் உணர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.