கடந்த இரண்டு தினங்களாகவே சோசியல் மீடியாவை திறந்தாலே, யோகி பாபு, யோகி பாபு என்ற செய்தி தான் ட்ரெண்டிங் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. பார்க்கப் பச்சைப்பிள்ளை போல் இருந்தாலும், இவர் செய்யும் வேலையெல்லாம் பயங்கரமானதாக இருக்கிறதே என பலரும் இவரை விமர்சித்தும் வருகின்றனர். முதலில் வலைப்பேச்சு டீம்மில் இருப்பவர்கள், யோகி பாபுவை பற்றி விமர்சிக்க, உடனே அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறேன் என யோகி பாபு பொங்கி எழுந்தார்.
அதைப் பார்த்து கடுப்பான வலைப்பேச்சு டீம், யோகி பாபுவை பற்றிய பல தகவலை வெளியிட்டு வருகின்றனர். இதுதான் தற்போது யோகி பாபுவுக்கு எமகண்டமாக மாறியிருக்கிறது. இந்நிலையில்தான் ஒரு பக்கம் வலைப்பேச்சு டீம்மின் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் யோகி பாபுவுக்கு, தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி, இனி யோகி பாபுவை படத்தில் நடிக்க விடமாட்டோம் என போர்க்கொடி தூக்கி இருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வலைப்பேச்சு டீமானது ஏற்கனவே, யோகி பாபு ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் செத்து சுண்ணாம்பாகி விடுவார்கள், அந்த அளவிற்கு இவர் கடும் டார்ச்சர் கொடுத்து விடுவார் என பல விஷயங்களை எடுத்துக்காட்டாக கூறியிருந்தனர். மேலும் இதற்கிடையில் அஜித் படத்தில் யோகி பாபு நடிக்கும் போது அஜித் அவரை டோன் டச் மீ என விரட்டியதாக யோகிபாபுவே வலைபேச்சு டீம்மை தொடர்பு கொண்டு அஜித் என்னிடம் தீண்டாமை பார்க்கிறார் என வீடியோ போடுங்கள் என்று அவரே கூறியிருக்கிறார்.
இப்படி டபுள் சைடு கோல் ஆடிய யோகி பாபுவின் முகத்திரையும் கிழிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அஜித்தின் வலிமை படத்தில் யோகி பாபு நடித்திருந்தார், ஆனால் அவர் கொடுத்த ஓவர் டார்ச்சரால் அஜித்தே அந்த படத்தில் இருந்து யோகிபாபுவை கழட்டிவிட்டுவிட்டார் என்றும், இவரை காட்டிலும் வடிவேலு கூட எவ்வளவோ பரவாயில்லை என்றும் கூறியிருந்தனர்.
ஏனெனில் வடிவேலு கூட அவர் வாங்கிய பணத்திற்கு ஒழுங்காக நடித்து முடித்துக் கொடுப்பார். ஆனால் யோகி பாபு அதற்கும் வஞ்சகம் செய்கிறார். யோகி பாபு ஒரு படத்தை முடித்தால் கூட ஒழுங்காக டப்பிங் செல்ல மாட்டார். இவரை பிடிப்பதற்காக மொபைல் டப்பிங் வேன் கூட தயாரிப்பாளர்கள் அனுப்பி வைப்பார்கள். அந்த வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் வாடகை.
அதுபோக அதில் டப்பிங் சம்பந்தமான வேலை செய்வதற்கு ஒரு ஆளுக்கு 2500 ரூபாய் என மொத்தமாய் பல லட்சங்கள் செலவாகும். அதிலேயும் யோகிபாபு பல தொந்தரவுகள் கொடுத்து, தயாரிப்பாளர்கள் பணத்தை வீண் செய்வார் என குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி அவர் செய்யும் அநியாயங்களுக்கு அளவே கிடையாது என வலைப்பேச்சு டீம் கூறியுள்ளது.
இந்நிலையில் தான் யோகிபாபு நடித்து முடித்து வெளிவரவுள்ள படங்களும், நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் என்ணிக்கையும் அதிகளவில் இருக்கிறது. மேலும் இவர், ஏற்கனவே நடித்து முடித்துள்ள 30 படங்களுக்கு டப்பிங் பேசாமல் இருந்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் பலமுறை அழைத்தும் யோகிபாபு போகவில்லை. எனவே, இயக்குனர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து தான், சமீபத்தில் யோகிபாபுவை போனில் அழைத்த தயாரிப்பாளர் சங்கம் பாத்து தம்பி சோழிய முடிச்சிடுவோம், உடனே வந்து நீங்கள் டப்பிங் பேசவில்லையென்றால் ரெட் கார்டு போடுவோம் என எச்சரித்துள்ளனர். ஏற்கனவே தனுஷ், விஷாலுக்கு ரெட் கார்டு போட்டதை பார்த்து அரண்டு போய், யோகிபாபு கடந்த 4 நாட்களாக ஒரே டப்பிங் தியேட்டரில் உட்கார்ந்து அந்த எல்லா படங்களுக்கும் இரவும், பகலுமாக டப்பிங் பேசி வருகிறாராம்.
அதாவது தமிழ் சினிமாவில் தற்போது சூரி, வடிவேலு, சந்தானம், விவேக் என எந்த காமெடியன்களும் களத்தில் இல்லை. எனவே, கோலிவுட்டானது காமெடிக்கு யோகிபாபுவை மட்டுமே நம்பியிருக்கிறது. அவரின் காமெடிகள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றாலும் அவரை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலையில் இயக்குனர்கள் யோகி பாபுவை அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.
மேலும் ஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருந்தாலும், யோகிபாபு தனது வேலையை சரியாக செய்வதில்லை என பல புகார்கள் எழந்ததாலேயே, தயாரிப்பாளர்கள் யோகி பாபுவை இனி படத்தில் நடிக்க விடாமல் செய்து விடுவோம் என எச்சரித்து , அனைத்து டப்பிங் வேலைகளையும் முடிக்க உத்தரவு போட்டுள்ளது.