அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை முடித்துவிட்டு அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. இந்த படத்திற்கான லொகேஷன் தேர்வு, மற்ற நடிகர்கள் தேர்வு, என அனைத்தையும் முடிவு செய்து, முழு கதையையும் அஜித்திடம் தெரிவித்து படத்தை தொடங்கலாம் என சென்ற விக்னேஷ் சிவன் கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை என அஜித் நடிக்கும் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் விக்னேஷ் சிவன்.
ஒரு படத்தில் கமிட்டாகி அந்த படத்திற்கான சுமார் 6 மாதங்களுக்கு மேல் வேலை செய்து இறுதியில் கதை பிடிக்கவில்லை என அஜித் கழட்டிவிட்டது, விக்னேஷ் சிவன் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று சொல்லுபடி அமைந்துவிட்டது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு பல இயக்குனர்கள் அஜித் படத்தை இயக்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில் மிக குறுகிய காலத்தில் இயக்குனர் மகில் திருமேனியிடம் ஒன் லைன் ஸ்டோரியை கேட்டு உடனே அஜித் நடிக்கும் படத்தில் கமிட் செய்யப்பட்டார்.
ஏற்கனவே விக்னேஷ் சிவனிடம் ஒன் லைன் ஸ்டோரியை கேட்டு முழு கதையையும் தயார் செய்து வந்தபோது கதை பிடிக்கவில்லை என விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டது போன்று, மீண்டும் விடக் கூடாது என்பதற்காக மகிழ்திருமேனியை முதலில் படத்தின் முழு ஸ்கிரிப்ட் தயார் செய்து வரட்டும் அதன் பின்பு படப்பிடிப்பை தொடங்கலாம் என்பதில் நடிகர் அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக இருந்தது.
அந்த வகையில் மகாபலிபுரம் அருகே ஒரு ஹோட்டலில் பல நாட்கள் தங்கி தன்னுடைய உதவி இயக்குனர்கள் உடன் முழு ஸ்கிரிப்டை தயார் செய்தார் மகில் திருமேனி. இந்நிலையில் மகிழ் திருமேனி ஸ்கிரிப்ட் தயார் செய்யும் அந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர் அஜித் பைக் எடுத்துட்டு ஒரு ரவுண்டு நேபால், பூட்டன் என பைக் பயணத்தை தொடங்கினார்.
இந்த நிலையில் அஜித் பைக் ரேஸை முடித்து வருவதற்குள் மகிழ் திருமேனி முழு ஸ்கிரிப்ட் தயார் செய்துவிடுவார், அஜித் வந்து கதையை கேட்ட உடனே படப்பிடிப்பு தொடங்கி விடும் என்று தகவல் வெளியானது. ஆனால் அஜித் பைக் பயணத்தை முடித்து வந்து மகிழ் திருமேனி தயார் செய்து வைத்துள்ள முழு ஸ்கிரிப்ட்டையும் ஓரிரு நாட்களில் கேட்டு ஓகே செய்ததும் அடுத்து ஒரு வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது.
ஆனால் நடிகர் அஜித் பைக் பயணத்தை முடித்து சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், இதுவரை மகிழ் திருமேனியிடம் இருந்து வந்த முழு ஸ்கிரிப்ட் பேப்பரில் முதல் பக்கத்தை கூட இதுவரை பார்க்காமல், காலம் தாமதம் செய்து வருகிறார் அஜித் என கூறப்படுகிறது. இதனால் அஜித் ஒரு வேலை சினிமாவில் போதும் நடித்தது என்கின்ற முடிவுக்கு வந்து விட்டாரா? என்கின்ற ஒரு சந்தேகத்தை சினிமா துறையில் கிளப்பி வருகிறார்கள்.
மேலும் நடிகர் நடிகர் அஜித் வழக்கம்போல் அவருக்கு பிடித்தமான இயக்குனர்களான சிறுத்தை சிவா, எச் வினோத் போன்றவர்களின் இயக்கத்தில் நடிக்கவே விரும்புவதாகவும், இந்நிலையில் மகிழ்திருமேனியுடன் அஜித் இன்னும் இணக்கமாகாமல் இருந்து வருவதாகவும், அந்த வகையில் மகிழ் திருமேனியுடன் நடிகர் அஜித் இணைந்து பணியாற்றுவதற்கு விருப்பமில்லை என்றும், அதனால் விடாமுயற்சி படத்தின் டைட்டில் வெளியானதோடு நிற்கிறது இந்த ப்ராஜெக்ட் என்கிறது சினிமா வட்டாரங்கள்.