கேப்டனுக்கு இது வரை இரங்கல் தெரிவிக்காத அஜித்…வெற்றி துரைசாமி உடலை பார்க்க மட்டும் ஓடோடி வந்தது ஏன் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சமீபத்தில் ஹிமாச்சல பிரதேச சுற்றுல சென்று இருந்த நிலையில், அவர் சென்ற கார் விபத்துக்குள் உள்ளானது, தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மீட்பு குழு, சுமார் 9 நாட்களுக்கு நடத்திய தேர்தலில் வெற்றி துரைசாமி உடலை சடலமாக கண்டெடுத்தனர்,

நடிகர் அஜித்துக்கு மிக நெருங்கிய நபர்களில் ஒருவர் வெற்றி துரைசாமி, சுமார் 15 வருடங்களுக்கு முன்பே அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட வெற்றி துரை சாமி அது குறித்து வெற்றி துறை சாமி மற்றும் அஜித் இருவரும் அடிக்கடி சந்தித்தும் பேசியுள்ளார்கள், அஜித் போன்றே விசித்திரமான வாழ்க்கையை விரும்பி வாழ கூடியவர் வெற்றி துரை சாமி. அந்த வகையில் அஜித் போன்றே பைக் பயணம், கார் ரேஸ் என விரும்பி செய்ய கூடியவர்.

மேலும் ஒரு மேயரின் மகனாக வெற்றி துரைசாமி இருந்திருந்தாலும் கூட, அப்பா பெயரை பயன்படுத்தி அரசியலுக்கு வருவதற்கு வெற்றி துரைசாமிக்கு விருப்பமும் இல்லை, மேலும் அவருக்கு அஜித் போன்று ஒரு அமைதியான வாழ்க்கையை குறிப்பாக விளம்பரம் இல்லாமல், தன்னை சுற்றி மிக குறுகிய நண்பர்களை மட்டும் வைத்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த வெற்றி துரைசாமியின் நெருங்கிய நபர்களில் அஜித்தும் ஒருவர்.

இந்நிலையில் அஜித் எப்படி மலை பிரதேசங்களில் பைக் பயணம் மேற்கொண்டு இயற்கையை ரசிப்பது போன்று, ஹிமாச்சல பிரதேசத்திற்கு நண்பருடன் சுற்றுலா சென்ற வெற்றி துரைசாமி பயணத்தை முடித்துவிட்டு விமானநிலையம் திரும்பும் வழியில், வாகனத்தை ஒட்டி வந்த டிரைவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வழிகாரணமாக அவர்கள் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. இதில் பரிதாபமாக உயிர் இழந்த வெற்றியின் இழப்பது அவருடைய நண்பர் நடிகர் அஜித்தை நிலைகுலைய செய்துள்ளது.

வெற்றி துரைசாமி உடல் கண்டெடுக்கப்பட்டதும் அஜித் மனைவி ஷாலினி சைதை துரைசாமி வீட்டிற்கு சென்றும் நாள் முழுவதும் சைதை துரைசாமி குடும்பத்தினரின் சோகத்தில் பங்கேற்று ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் வெற்றி துரைசாமி உடல் சடலமாக கண்டெடுடுக்கப்பட்டு விட்டது என தகவல் வெளியானதும் நண்பர் வெற்றியின் வீட்டிற்கு ஓடோடி வந்து குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் அஜித்.

இந்நிலையில் நண்பர் வெற்றியின் மரணத்திற்கு ஓடோடி வந்த அஜித், அவருடைய நண்பரை இழந்து தவித்து வரும் நிலையில் அவருக்கு ஆறுதலாக அனைவரும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் இதே போன்று கேப்டன் விஜயகாந்த் மரணம் அடைந்த போதும் இருந்திருக்க வேண்டும் என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். விஜயகாந்த் மரணம் அடைந்த போது வெளிநாட்டில் இருந்த அஜித். ஒரு இரண்டு வரியில் இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை.

மேலும் வெளிநாட்டில் நியூ இயர் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித், விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார், விஜயகாந்த் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதை எதையுமே அஜித் செய்யவில்லை, அந்த வகையில் ஒருவர் மகிழ்ச்சியில் பங்கேற்கிறோமோ இல்லையோ, ஒருவர் துக்க நிகழ்வில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்பதை அஜித் புரிந்து கொள்ள வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.