ஹிந்தி சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரானவர் போனி கபூர், 40 வருடங்களாக இந்தி படங்களை தயாரித்து வருகிறார். தெலுங்கில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் தவிர்த்து பிற மொழி படங்களை அவர் தயாரிப்பதில்லை. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக உருவெடுத்தவர் முதல் படமே எதிர்பார்த்த வெற்றியை கொடுத்து, நல்ல லாபத்தையும் பெற்று தந்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில் வலிமை படத்தை தயாரித்த போனி கபூர், அந்தப் படம் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டு படம் சவெளியாவதற்கு இரண்டு வருடங்கள் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் வலிமை படத்தின் தயாரிப்பு செலவும் அதிகரித்தது. மேலும் வலிமை படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், தயாரிப்பாளர் போனி கபூருக்கு சிறிய சேதாரத்தையும் ஏற்படுத்தியது.
தயாரிப்பாளர் போனி கபூர் நிலைமை அறிந்த அஜித்குமார், அவருடைய தயாரிப்பில் மீண்டும் கால் சீட் கொடுத்து, போனி கபூருக்கு ஏற்பட்ட சேதாரத்தை சரி செய்வதர்க்கு உதவி செய்தார். அந்த வகையில் மீண்டும் போனி கபீர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் துணிவு படம் தொடங்கப்பட்டது. பொதுவாக பல முன்னணி தயாரிப்பாளர்கள் கூட பிரபல நிறுவனங்களிடம் சினிமா பைனான்சியர்களிடம் பணம் பெற்று தான் பல படங்களை தயாரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் துணிவு படத்தை தயாரிக்க போனி கபருக்கு பைனான்ஸ் செய்து வந்த Z ஸ்டூடியோ ஒரு ஒரு கட்டத்திற்கு மேல் துணிவு படத்திற்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்திக் கொண்டது. இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்கும் சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜி. ஸ்டூடியோ பணம் பைனான்ஸ் செய்வதை நிறுத்தி விட்டதால், அஜித் படம் நின்று விட்டது என்கின்ற ஒரு செய்தி வந்து விடக்கூடாது என்பதற்காக அஜித் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் வரை பைக் பயணம் மேற்கொண்டார்.
அதே போன்று துணிவு பைனாஸ் பிரச்சனையால் தாமதமான நிலையில், படத்தின் இயக்குனர் எச் வினோத் வேறு ஒரு படத்தை இந்த இடைப்பட்ட காலத்தில் எடுத்துவிட்டு வந்துகிறேன் என்று முயற்சி செய்தபோது. அதற்கு அஜித் அதெல்லாம் முடியாது துணிவு படத்தை முடித்துவிட்டு பிறகு வேறு படத்திற்கு போகலாம், எல்லாம் விரைவில் சரி செய்து விடுவார் போனி கபூர் என்று தெரிவித்ததால், வேறு எந்த ஒரு படத்தையும் இயக்காமல் துணிவு படத்தை முடித்துவிட்டு வேறு ஒரு படத்திற்கு போகலாம் என்கின்ற முடிவுக்கு வந்தார் H.வினோத்.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, துணிவு படத்தை எடுத்து முடித்து திரையில் வெளியிட்டு நல்ல வசூலையும் பெற்று லாபத்தையும் அடைந்துள்ள போனி கபூர், இனி அடுத்து அவர் இயக்கும் படங்களுக்கு ஜி ஸ்டூடியோ பைனான்ஸ் செய்ய செய்வது கிடையாது என்று தெரிவித்துவிட்டது. இதனால் இனிமேல் தமிழ் படத்தை தயாரிப்பதில்லை என்கின்ற முடிவுக்கு வந்த போனி கபூர்.
எப்போதும் போல் ஹிந்தி படங்களை மட்டுமே தயாரிக்க இருப்பதாகவும், அதனால் தமிழ் சினிமாவுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறி உள்ளார் போனி கபூர் என்கின்றது சினிமா வட்டாரங்கள். இதனால் போனி கபூர் தமிழில் தயாரித்த கடைசி படமாக துணிவு படம் அமைத்துள்ளது குறிப்பிடதக்கது.