அஜித் கொடுத்த இறுதி வாய்ப்பு… சோதனையை சாதனையாக்கிய H.வினோத்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் ஆரம்ப கட்டத்தில் கடுமையாக போராடி இரண்டு அல்லது மூன்று வெற்றி படங்களை கொடுத்த பின்பு, பெரிய ஹீரோக்கள் வைத்து படம் இயக்கும் வாய்ப்புக்காக தேடுகிறார்கள் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததும் அந்த ஹீரோவுக்கு ஏற்றார் போல் இரண்டு பாட்டு சில சண்டை காட்சிகளை வைத்து, முழுக்க முழுக்க அந்த ஹீரோவை மட்டுமே நம்பி இயக்குனர்கள் எடுக்கும் படம் சமீப காலமாக தோல்வியை தழுவி வருகிறது.

ஒரு கதையை தேர்வு செய்யும் போது அந்த கதைக்கான நிறைய ஆய்வுகளை இயக்குனர் செய்ய வேண்டும், ஏதோ ஹீரோ கிடைத்துவிட்டார்கள் என்பதற்காக படப்பிடிப்பை தொடங்குவதால் பெரும் படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சினிமா ரசிகர்கள் தற்பொழுது தெளிவாக இருக்கிறார்கள். எந்த ஒரு முன்னணி நடிகர்கள் நடித்தாலும் கூட கதை நன்றாக இருந்தால் மட்டுமே படம் வெற்றி அடைகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதத்தில் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் திரையில் வெளியான நிலையில், விஜய் நடித்த வாரிசு திரைப்படம் முதல் நாளே மண்ணைக் கவ்வி படுதோல்வியை அடைந்துள்ளது. ஆனால் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் H.வினோத் முதல் மூன்று படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்து அடுத்து நான்காவது படம் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இயக்குனர் எச் வினோத்தின் சினிமா வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில், எச் வினோத்துக்கு மீண்டும் தன்னுடைய படத்தை இயக்கும் இறுதி வாய்ப்பை கொடுத்தார் அஜித்.

ஆனால் தன்னுடைய சினிமா வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய படம் இது என்பதால், மிக கவனமாகவும் மிக தீவிர ஆய்விலும் இந்த படத்தின் கதைக்காக வேலை செய்துள்ளார் எச். வினோத், வங்கி மற்றும் பணம் தொடர்பான கதை என்பதால், இந்தியாவில் உள்ள பிரபல பொருளாதார நிபுணர்களிடம் இந்த கதை குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி அந்த கதையை தயார் செய்துள்ளார் எச் வினோத்.

இதனால் பெருந்தொகை செலவிட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபத்தை பெற்று கொடுத்துள்ளது. மேலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அஜித் கொடுத்த இறுதி வாய்ப்பை தனக்கான வெற்றி படிக்கட்டுகளாக H.வினோத் மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.