இந்த சிறு வயதிலே இப்படி ஒரு சாதனையா.? அஜித் மகன் செய்த மிக பெரிய சாதனை…

0
Follow on Google News

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கடும் உழைப்பினால் போராடி கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

படப்பிடிப்பு மற்றும் இதர விஷயங்களில் எவ்வளவுதான் அஜித் பிசியாக இருந்தாலும், குழந்தைகளுடைய பள்ளி மற்றும் பர்சனல் சார்ந்த விஷயங்களுக்கும் நேரம் ஒதுக்கி செயல்படுவர் நடிகர். அது தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரல் ஆகும். இந்நிலையில் தற்போது அஜித் மகனின் சூப்பரான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

அதாவது ஆத்விக் தனது பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு காட்டி விளையாட அவர் முதல் இடத்தை பிடித்துள்ளாராம். 50m dash, 75m dash & 4*100m Relay என போட்டிபோட்ட ஆத்விக் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் அஜித் மகன் ஆத்விக் சென்னை கால்பந்து அணியில் சேர்ந்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இதனை அடுத்து சென்னை அணி சார்பாக ஆத்விக் விளையாடி பதக்கமும் முன்னர் வென்றிருக்கிறார். அஜித் பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தாலும், அவரது மகன் ஆத்விக் தனி ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கும் ஆத்விக், தற்போது புகழ்பெற்ற சென்னையின் எஃப்.சி அணியின் யூத் டீமிற்காக விளையாடி வருகிறார்.

இது தொடர்பான புகைப்படங்கள் முன்னர் வெளியாகின. இந்நிலையில் தற்போது மேலும் பல பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.தற்போது ஆத்விக்கிற்கு 8 வயதாகும் நிலையில், அவரின் க்யூட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது அவர் பதக்கங்களை வென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இதை பார்த்து ரசிகர்கள் பலரும், புலிக்கு பிறந்தது பூனையாகுமா! என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், ஆதிவிக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.