நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியான முன்னணி நடிகர்கள் படமான ரஜினி நடிப்பில் அண்ணாத்தே, அஜித் நடிப்பில் வலிமை, விஜய் நடிப்பில் பீஸ்ட் என தொடர் தோல்விகளை தமிழ் சினிமா சந்தித்து வந்தது, அதே காலகட்டத்தில் பிற மொழி படங்களான RRR, கேஜிஎப் போன்ற படங்கள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பெரும் வசூல் சாதனை படைத்தது.
இதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் படக்குழுவினர் படம் வெளியாவதற்கு முன்பு சுமார் ஒரு மாதம் அவர்கள் இந்தியா முழுவதும் செய்து வந்த ப்ரோமோஷன் தான் என்கிற கருத்து வெளியானது, இதேபோன்று தமிழ் சினிமா துறையினரும் ப்ரோமோஷன் செய்தால் அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் என்று சினிமா விமர்சனங்கள் அறிவுரை வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கமல்ஹாசன் இந்தியா முழுவதும் சென்று அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தமிழ் சினிமா தொடர் தோல்வியை சந்தித்து வந்த காலகட்டத்தில் விக்ரம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்து, தமிழ் சினிமாவை தலை நிமிர செய்தது என்று சொல்லலாம்.
அந்த வகையில் அடுத்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்பு சுமார் ஒரு மாதம் அந்தப் படத்தின் ப்ரோமோஷன் இந்தியா முழுவதும் செய்யப்பட்டு வந்தது, இந்தப் படமும் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் விக்ரம் பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து சினிமா எடுப்பது பெரிய விஷயம் இல்லை, ஆனால் அந்தப் படத்தை பிரமோன்ஸ் பிரமோஷன் செய்து மக்கள் மத்தியில் சேர்த்தால் தான் படம் வெற்றி அடையும்.
அதனால் அஜித் போன்ற நடிகர்கள் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்ப்பதை விட்டுவிட்டு அவர்களும் தங்களுடைய தயாரிப்பாளர்கள் லாபத்தை ஈட்டு தர வேண்டும் என்பதற்காக புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பலரும் அறிவுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் தற்போது வெளியான லத்தி படம் வெளியாவதற்கு முன்பு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என பல இடங்களுக்கு சென்று படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்தார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அழைத்து விஷாலை சந்திப்பதாக கூட ஒரு வகை பில்டப் செய்து இந்த படத்தின் ப்ரோமோசனுக்கு வித்திட்டார் விஷால். ஆனால் இந்த படம் தமிழகத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கேரளாவில் வெளியான ஒரு திரையரங்குகளில் ஒரே ஒரு ரசிகர் மட்டும் டிக்கெட் எடுத்து படம் பார்க்க திரையரங்குக்குள் சென்றுள்ளார்.
ஆனால் ஒரே ஒரு ஆட்களுக்கு மட்டும் படத்தை திரையிட்டு காண்பிக்க முடியாது என்று, அந்த சோவையை கேன்சல் செய்து விட்டதாக செய்துள்ளார்கள். இதேபோன்று நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள கனெக்ட் படம் வெளியாவதற்கு முன்பு நயன்தாரா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பொதுவாகவே நடிகர் நயன்தாரா, நடிகர் அஜித் போன்று ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்.
ஆனால் விக்ரம், பொன்னியின் செல்வன் வெற்றியை பார்த்த பின்பு அவரும் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்ட விஷால் நடிப்பில் வெளியான லத்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட்ஆகிய இரண்டு படங்கள் தோல்வி அடைந்துள்ளது.
இந்த நிலையில் அஜித் சொன்னது போன்று நல்ல படத்திற்கும், கதைக்கும் விளம்பரம் தேவையில்லை. படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் பார்ப்பார்கள் என்று சொன்னது போன்று விளம்பரம் மட்டுமே அந்த படத்தின் வெற்றிக்கும் உதவாது. படம் கதை நன்றாக இருந்தால்தான் வெற்றி அடையும் என்கின்ற அஜித் ஃபார்முலா தான் தற்பொழுது சினிமாவில் வெற்றி பெறும் என்பதை சினிமா துறையினர் உணர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.