பைக் ரேஸ் கட்சியில் டூப்பு போட்ட அஜித்… ரிஸ்க் எடுக்க பயமா… என்னாச்சு அஜித்குமார்க்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை, பைக் ரேஸ் காட்சிகளை மையப்படுத்தி முழுக்க முழுக்க எடுக்கப்பட்ட படம் வலிமை. இந்த படத்தில் பைக் ரேஸ் சாகசங்களை மிக அருமையாக செய்திருப்பார் அஜித் குமார். பொதுவாகவே அவர் பைக் ரேஸ் மீது அதிகம் காதல் கொண்டவர் என்பதால் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை எதிர்பார்த்த லாபத்தை அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு பெற்று தரவில்லை. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில், மீண்டும் அவருடைய தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுக்க முன் அந்த அஜித்குமார், அதற்கான கால் சீட்டு கொடுத்தார்.

ஏற்கனவே வலிமை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் மீண்டும் அஜித் 61 படத்தை போனிகபூர் தயாரிப்பில் இயக்கி வருகிறார். அஜித் 61 படத்தை முடித்துவிட்டு அடுத்த படம் விக்னேஷ் சிவன் இயக்கம் அஜித் 62 படத்திற்கான படப்பிடிப்புக 2023 ஜனவரி 1ஆம் தேதி பட பூஜை தொடங்கும் என உறுதி செய்யப்ட்டுள்ளது. பட பூஜை முடிந்த அடுத்த நாள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் நடிக்கும் படம் பெரும்பாலும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது அஜித் நடித்து வரும் ஹெச்.வினோத் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வைசாக்கில் தொடங்க இருக்கிறது இதில் அஜித் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் ஹெச் .வினோத் தற்பொழுது அஜித்தை வைத்து எடுக்கப்பட்டு வரும் படத்தின் படப்பிடிப்பு அஜித் இல்லாமல் கடந்த வெள்ளி சனி அன்று சென்னை இசிஆர் ரோட்டில் பைக் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அஜித் பைக் ஒட்டும் காட்சிகளில் அவருக்கு பதில் டூப்பு போட்டு படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பைக் சேஸிங் காட்சிகள் டூப்பு போடுவது மிக எளிதானது.

டூப்பு போடுபவர்கள் ஹெல்மெட் போட்டு பைக் வேகமாக ஓட்டினால், அது யார் என்று கண்டு பிடிக்க முடியாது. ஆனால் இதற்கு முன்பு மங்காத்தா, வலிமை, விவேகம் போன்ற படங்களில் பைக் ரேஸ் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து பாராட்டை பெற்ற அஜித் அவர்களுக்கு என்னாச்சு, ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க முடிவு செய்து விட்டாரா அஜித்குமார் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை சிக்க வைத்த இரண்டு மகள்கள்…. அன்புச்செழியன் விவகாரத்தில் என்ன நடந்தது தெரியுமா.?