சினிமாவே வேண்டாம்… குடும்பத்துடன் நாட்டை விட்டே வெளியேறும் அஜித்.. எங்கே செல்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாதராண மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட விளக்கத்தில் அவர் ரெகுலர் செக் அப்பிற்காக மட்டுமே மருத்துவமனை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அஜித்துக்கு அப்பல்லோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதனை நான்கு மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் அகற்றியதாகவும் தகவல் வெளியானது. மேலும் அஜித் மருத்துவர்களின் திவீர கண்காணிப்பிலேயே இருப்பதாக கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இந்த நிலையில், மருத்துவமனையில் அஜித்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அப்போது விளக்கம் அளித்து இருந்தார். அதன்படி, அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல என்றும் கூறிய அவர், வழக்கமான பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அதற்கான சிகிச்சை அரை மணிநேரம் நடந்ததாகவும் கூறினார்.

அவர் ஐசியூ எனும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். உடல்நலம் சீராக உள்ளது. இதனால் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அஜித் மேனஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் கொடுத்து இருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அஜித் அடுத்தடுத்து படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அவசர அவசரமாக மருத்துவமனையில் அஜித் அட்மிட் ஆன போது, அஜித்துக்கு செய்யவேண்டியது மேஜர் ஆபரேஷன் என்றும், அப்போதைக்கு தற்காலிகமாக அடிப்படையான ஒரு சிகிச்சை நடிகர் அஜித்துக்கு அளிக்கப்பட்டது. ஆனால் விரைவில் அஜித்துக்கு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழல் உள்ளது என மருத்துவர்கள் அஜித்துக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது நடிகர் அஜித் தன் கைவசம் இருக்கும் விடா முயற்சி மற்றும் குட் பேட் அட்லி ஆகிய இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ஆபரேஷன் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். காரணம் நடிகர் அஜித்துக்கு மேஜர் ஆபரேஷன் நடந்தால் அதற்கு பின்பு தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க வேண்டும், அதனால் படத்தை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்பொழுது கைவசம் இருக்கும் விடாமுயற்சி படம் இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அதை முடித்துவிட்டு மற்றும் ஒரு படமான குட் பேட் அட்லி படத்தையும் முடித்துவிட்டு நடிகர் அஜித்துக்கு செய்ய வேண்டிய மேஜர் ஆபரேஷன் செய்யப்பட இருக்கிறது. அதன் பின்பு தன்னுடைய குடும்பத்துடன் துபாயில் ஓய்வில் இருக்கும் அஜித் பூர்ண குணம் ஆன பின்பு அவர் சினிமாவில் நடிப்பதும் அல்லது போதும் சினிமா வாழ்க்கை என முடிவு எடுப்பதும் அவருடைய கையில் தான் உள்ளது.

காரணம் சமீபத்திலும் அவருடைய மனைவிக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றது, தற்பொழுது அஜித்தும் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது, அதனால் இனிவரும் காலங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்யவே அஜித் விரும்புவார் என்பதால் மேலும் அவருக்கு கடந்த சில வருடங்களாகவே சினிமா மீது இருந்த மோகம் குறைந்து விட்டது என்று கூறப்படுகிறது அந்த வகையில் அஜித்துக்கு நடக்க இருக்கும் மேஜர் ஆபரேஷனுக்கு பின்பு தான் அஜித் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்கிற சந்தேகம் நிலவி வருகிறது.