பொதுவாகவே ஒரு மாஸ் ஹீரோவின் டீசர் ட்ரெய்லர் அல்லது வேற ஏதாவது அப்டேட் வருகிறது என்றால் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே அந்த டீசருக்கான ப்ரமோஷன் வேலையை ஆரம்பித்து விடுவார்கள். இந்த தேதியில் வருகிறது, தொடர்ந்து இன்னும் ஐந்து நாட்கள், நான்கு நாட்கள் என்று கவுண்டன் போட ஆரம்பித்து விடுவார்கள். அந்த டீசர் வெளியிடுவதற்கு முன்பு சின்னதா ஒரு கிலிம்ஸ் வீடியோ.
அதனைத் தொடர்ந்து ஒரு போஸ்டர், இப்படி எல்லாம் ஒரு டீசருக்கு மிகப்பெரிய அளவில் பில்டப் கொடுத்து, மாஸ் ஹீரோ நடிகர்களுக்கு டீசர் வெளியிடப்படும். ஆனால் எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல் திடீரென்று 11; 0 8 இரவு அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி டீசர் வெளியிடப்பட்டது. எதிர்பார்க்காமல் வந்த டீசரை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த அளவுக்கு டீசர் பிரம்மிப்புடன் உள்ளது. விடாமுயற்சி படத்தின் டீசர் மூலம் நடிகர் அஜித்திற்கான மாஸ் இந்த மாசை யாராலும் தடுக்க முடியாது என்று மீண்டும் ஒருமுறை விடாமுயற்சி டீசர் மூலம் நிரூபித்திருக்கிறார் அஜித். சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின்பு அஜித் நடிக்கும் இந்த விடாமுயற்சி படம் வெளிய வர இருக்கிறது. துணிவு படம் முடிந்த உடனே ஆரம்பிக்கப்பட்ட படம் விடாமுயற்சி.
ஆனால் இந்த படம் டைட்டில் வைப்பதற்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித்துக்கு கதை மேல் திருப்தி இல்லை, பின்பு கதையில் நிறைய மாற்றப்பட்டது. பிறகு அந்த படத்தின் முழு பவுண்டேர் ஸ்ட்ரீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அஜித்துக்கு விக்னேஷ் சிவன் மீது நம்பிக்கை இல்லை அந்த கதையும் திருப்தி படுத்தவில்லை, இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்குவதற்கு எல்லாம் தயார் நிலையில் இருந்த நிலையில்.
அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார், தன்னுடைய கணவருக்காக நயன்தாரா நேரடியாக அஜித்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்ட போது அதற்கு எல்லாம் அஜித் ஒப்புக்கொள்ளவே இல்லை. காரணம் அஜித் ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்றால் அதில் உறுதியாக இருப்பார், அது நயன்தாரா சொன்னா என்ன.? யார் சொன்னா என்ன.? என்பதுதான் அஜித்தின் பாலிசி.
1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் விடாமுயற்சி என்று தகவல் வெளியான நிலையில், கிட்டத்தட்ட விடாமுயற்சியின் படத்தின் டீசர் பார்க்கும் பொழுது அந்த படம் போல் தான் தெரிய வருகிறது. கணவனும் மனைவியும் வெளிநாட்டிற்கு செல்கிறார்கள், அப்போது மனைவி கடத்தப்படுகிறார், ஏன் கடத்தப்படுகிறார்.? கடத்தப்படுவதற்கான காரணம் என்ன.? அந்த மனைவியை தேடி கண்டுபிடிக்கும் கணவன், மனைவியை கண்டுபிடித்தார.? இல்லையா.? இதுதான் படத்தின் கதை சுருக்கம்.
இயக்குனர் மகிழ் திருமேனி கதைகளில் கிளை கதைகளை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு இயக்குனர். நிச்சயம் விடாமுயற்சி படத்தில் கிளை கதைகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விடாமுயற்சி டீசரை பார்க்கும் பொழுது ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த ஃபீலிங் வருவதற்கு முக்கிய காரணம் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அஜர் வைஜானில் நடந்தது தான் காரணம்,. தற்பொழுது பலருக்கும் தெரியவந்திருக்கும் அஜர் வைஜானில் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று, இந்நிலையில் விடாமுயற்சி டீசர் இப்படி இருந்தது என உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..