எந்த ஒரு துறையிலும் போட்டி என்பது இல்லாமல் இருக்காது அதன்படி சினிமா துறையை எடுத்துக் கொண்டால் இரண்டு தரப்பினர் கிடையே போட்டி என்பது எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்கள் இருவரும் போட்டி போட்டு கொள்கிறார்களோ இல்லையோ அவர்களது ரசிகர்களிடையே போட்டியானது முற்றி இருக்கும்!
அதன்படி ரஜினி – கமலுக்கு பிறகு விஜய் – அஜித் ரசிகர்கள் இடையேயான போட்டி என்பது எப்பொழுதுமே அதிரடியாகவும் சமூக வலைதளத்தையே அதிர வைக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான நேரங்களில் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியிடப்படாமல் இருக்கும்.
இருப்பினும் விஜய் படம் ஒன்று வெளியாகிறது என்றால் அதற்கு எவ்வளவு வசூல் ஆகிறது விஜய் படத்தின் பாடல் வெளியிடப்படும் பொழுது எவ்வளவு பேர் அதனை பகிர்கிறார்கள் எவ்வளவு பேர் அதற்கு லைக் கொடுக்கிறார்கள் என்பதை கவனித்து வைத்து அடுத்து அஜித் திரைப்படத்தின் பாடல் அல்லது டீசர் ட்ரைலர் வெளியாகும் பொழுது ஒப்பிட்டு பார்க்கும் இருவருக்கிடையான சண்டை என்பது எப்பொழுதுமே நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒன்று!
இந்நிலையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த 2023 ல் மீண்டும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் மூலம் விஜய் மற்றும் அஜித் இருவரது திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று மோதியது. இந்த இரண்டு திரைப்படங்களின் வெளியாகும் அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து பெரும் எதிர்பார்ப்பு இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையே மேலோங்கி இருந்தது.
அதில், வாரிசு படத்தில் விஜயின் ரஞ்சிதமே பாடலை விட துணிவு படத்தில் அஜித்தின் சில்லா சில்லா பாடல் சில மணி நேரங்களிலேயே அதிக லைக்களை பெற்று விட்டது. இதனால் துணிவில்லா – வாரிசு மற்றும் வாரிசிடம் குனிவு என்ற ஹாஷ்டாக்குகள் ட்விட்டரில் டிரண்டாகியதோடு இரண்டு ரசிகர்களும் மாறி மாறி ட்ரோல் செய்து கொண்டிருந்தனர்.
இதனை அடுத்து விஜய் தற்போது சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக விலகி அரசியலில் இறங்க உள்ளது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சிகர மகிழ்ச்சியை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் இருதுருவங்கள் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்யும் அஜித்தும் உண்மையாகவே நெருங்கிய நண்பர்கள் என்பது பலரும் அறியாதது.
ஆரம்ப காலத்தில் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்திருந்தனர். அதன்பின்னர் இருவரும் ‘நேருக்கு நேர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்நிலையில் இவர்கள் குறித்து ரமேஷ் கண்ணா ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். காமெடி, குணச்சித்திரம் என பல கேரக்டர்களில் கலக்கிக் கொண்டிருக்கும் ரமேஷ் கண்ணா விஜய், அஜித் இருவருக்கும் பொதுவான நண்பர். அஜித்துடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் இவர் அவரை வைத்து தொடரும் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.
அதனாலேயே இவர்களுக்குள் நெருங்கிய நட்பும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஒரு பேட்டியில் விஜய், அஜித் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் பேசுகையில், ஒருமுறை நான் அஜித்திடம் அரசியல் பற்றி பேசும்போது வாயை மூடிட்டு சும்மா இருக்கியா என்பது போன்று செய்கை செய்தார். பொதுவாக அஜித்துக்கு அரசியலில் ஆர்வமே கிடையாதாம். அரசியல் பேச்சை எடுத்தாலே அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டாராம். அரசியல் பற்றி அவருடைய ஒரே ஒரு பார்வை ஜனநாயக கடமையை ஆற்றுவது மட்டும்தான் என கூறி இருக்கிறார்.