நடிகர் விஜயகாந்த் மரணத்திற்கு வராமல் பல நடிகர்கள் நியூ இயர் கொண்டாட்டத்தில் பிசியாக இருந்தவிட்டு, சென்னை திரும்பியுள்ள நடிகர்கள், விஜயகாந்த் நினைவிடம் சென்று அழுது ஆக்சன் போட்டு தாங்கள் தலைசிறந்த நடிகர் என நிரூபித்து வருகிறார்கள். இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கிறார், இல்லை அவருக்கு சிறிய விபத்து அதனால் விஜயகாந்த் இறுதி சடங்கில் அஜித் கலந்து கொள்ளவில்லை என அஜித் தரப்பில் கிளப்பி விட்டுக்கொண்டிருக்க.
இங்கே விஜயகாந்த் மறைவுக்கு வராமல் துபாயில் ஒரு பெண்ணுடன் அஜித் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி அஜித்தை மக்கள் கழுவி கழுவி ஊத்தினார்கள்.இந்த நிலையில் நடிகர் அஜித் துபாயில் இருந்து சென்னை வந்ததும், ஏர்போட்டில் இருந்து நேரடியாக வீட்டிற்கு கூட செல்லாமல் விஜயகாந்த் நினைவிடம் சென்று அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி விட்டு, அதன் பின்பு விஜயகாந்தின் சாலிகிராமம் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரிப்பார் அஜித் என ஒரு தகவல் வெளியானது
இதனால் அஜித் நிச்சயம் விஜயகாந்த் வீட்டிற்கும் அவருடைய நினைவிடத்திற்கும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் துபாயிலிருந்து சென்னைக்கு வந்து நாட்கள் கடந்து கொண்டிருக்கையில் ஏன் இதுவரை விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தவில்லை என்கின்ற காரணம் வெளியாகியுள்ளது. இந்த காரணத்தை கேட்ட பலரும், அஜித் எப்போதுமே இப்படித்தானா இனிமே அவர் திருந்துவதற்கான வாய்ப்பு இல்லையா என்று கொந்தளிக்கும் வகையில் உள்ளது.
அதாவது நடிகர் அஜித் தரப்பிலிருந்து விஜயகாந்த் மனைவியிடம் தொடர்பு கொண்டு, அஜித் உங்கள் வீட்டிற்கு வந்து துக்க விசாரிக்க இருக்கிறார், ஆனால் பகலில் வந்தால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைவரும் தூங்கச் சென்ற பின்பு , அதாவது அனைத்து சாலைகளும் மயான அமைதியின் இருக்கும் அதிகாலை 3 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வந்து சந்தித்து இரங்கல் தெரிவிக்க வேண்டும்.
அதனால் உங்களுக்கு அஜித் மூன்று மணிக்கு வருவதால் எந்த ஒரு ஆட்சேபனும் இல்லையே என்று கேட்டுள்ளார்கள். அதற்கு பிரேமலதா தரப்பில் இருந்து நாங்கள் பதில் சொல்லுகிறோம் என சொல்லிவிட்டு தொலைபேசியை கட் செய்தவர்கள், இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதாவது துக்கம் விசாரிக்க வருகின்றவர்கள் அஜித் அதிகாலை 3 மணிக்கு இவர் வருவார் என்பதற்காக, இரவெல்லாம் தூங்காமல் காத்துக் கொண்டிருப்பார்களா.?
ஒரு வேளை விஜயகாந்த் வீட்டிற்கு அஜித் பகலில் வந்து துக்க விசாரிக்கும் போது அவரை காண ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருந்தால் அவரை பார்த்த ஒரு சந்தோஷமாக ரசிகர்களுக்கு கிடைக்கும், ஆனால் அந்த மகிழ்ச்சியை கூட அஜித் அந்த ரசிகர்களுக்கு தராமல், அதாவது தன்னை வாழ வைத்த மக்களையும் ரசிகர்களையும் இந்த அளவுக்கு இந்த உலகில் வெறுக்கக்கூடிய ஒரே நபர் அஜித் தான் என்று சொல்லும் அளவிற்கு அஜித்தின் நடவடிக்கை உள்ளது.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த விருப்பம் இல்லை, வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிக்க விருப்பம் அஜித்துக்கு இல்லை என்றால் வராமல் இருந்து விடலாம், ஆனால் அதிகாலை 3 மணிக்கு வருகிறறோம் என நேரம் கேட்டால் யாரும் தரமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே, அஜித் நேரம் கேட்டார், ஆனால் விஜயகாந்த் மனைவி எந்த பதிலும் சொல்லவில்லை என அஜித்தை புனிதராக்க இது போன்று நடந்து கொள்வது அஜித்துக்கு மிக பெரிய கேவலம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் மக்களையும் ரசிகர்களையும் வெறுக்கக்கூடிய அஜித் போன்ற நடிகர்கள் மக்களையும் ரசிகர்களையும் உயிராக நேசித்த விஜயகாந்த்க்கு மரியாதை செலுத்தாமல் இருப்பதே விஜயகாந்துக்கு அவர்கள் கொடுக்க மரியாதை என்கின்ற விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.