நடிகர் அஜித் சமீபத்தில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாதராண மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட விளக்கத்தில் அவர் ரெகுலர் செக் அப்பிற்காக மட்டுமே மருத்துவமனை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அஜித்துக்கு அப்பல்லோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதனை நான்கு மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் அகற்றியதாகவும், மேலும் அஜித் மருத்துவர்களின் திவீர கண்காணிப்பிலேயே இருப்பதாக உறுதி படுத்தாத தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அஜித்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார். அதன்படி, அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல என்றும் கூறிய அவர், வழக்கமான பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அதற்கான சிகிச்சை அரை மணிநேரம் நடந்ததாகவும் கூறினார்.
அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். உடல்நலம் சீராக உள்ளது. இதனால் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அதைப்போலவே வெகு சில மணி நேரங்களில் சிகிச்சை முடிந்து அஜித் நலமுடன் வீடு திரும்பிய தகவல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை கொடுத்தது.
இந்நிலையில் அஜித் வழியில் அனைவரும் செயல்பட வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இதயம், பக்கவாத பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன தொற்றா நோய்களை தடுக்க, மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், மக்களிடையே ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்வது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், முற்றிய நிலையில் பலர் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், 50 வயதை கடந்த நடிகர் அஜித், அவ்வப்போது உடற்பரிசோதனை செய்து கொள்ளும் வழககமுடையவர் சமீபத்தில் அவர் மேற்கொண்ட பரிசோதனையில், காது மூளை இடையே, நரம்பில் சிறிய வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அது, நாளடைவில் பக்கவாத பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்ததால், சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தன் வழக்கமான பணிகளில் நடிகர் அஜித் ஈடுபட்டு வருகிறார.
எனவே, நடிகர் அஜித்தை பின்பற்றி, 30 வயதுக்கு மேற்பட்டோர் அவ்வபோது உடற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என, பொது சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அஜித் பல வருடமாக சால்டன் பேப்பர் லுக்கில் இருப்பதற்கும் அவரின் மருத்துவர்கள் இனி தலையில் டை அடிக்கக் கூடாது என கொடுத்த கண்டிஷன் தான் காரணம் என சினிமா பத்திரிகையாளர் தெரிவித்து இருக்கிறார்.