சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா மிக பெரிய தோல்வியை தழுவியுள்ள நிலையில், அடுத்த அஜித்தை வைத்து சிறுத்தை சிவா படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விசுவாசம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த பின்பு இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு நடிகர் அஜித் ஒரு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.
அதாவது மீண்டும் சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் ஒரு படம் பண்ணலாம் என்கின்ற உத்தரவாதத்தை அப்போதே அஜித் சிறுத்தை சிவாவுக்கு கொடுத்திருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை தயாரிப்பதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன் வந்தது. அந்த படத்தில் நடிப்பதற்கு அஜித் மிகப் பெரிய தொகையை சம்பளமாக தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் உடன்படவில்லை. மேலும் அஜித் கேட்ட சம்பளத்தை விட பல மடங்கு குறைத்து அவர்கள் ஒரு சம்பளத்தை ஃபிக்ஸ் செய்துள்ளார்கள். அதற்கு அஜித் ஒத்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவாவை அழைத்து நீங்கள் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை பாருங்கள், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இந்த படத்தை பண்ண வேண்டாம் என்று அஜித் அப்போது தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கங்குவா படத்தை முடித்துவிட்டு, அடுத்து அஜித்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தை தயாரிக்க சில தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசலாம் என்கின்ற ஒரு முடிவில் இருந்தார் சிறுத்தை சிவா. ஆனால் கங்குவா படத்தின் தோல்வி, அடுத்து சிறுத்தை சிவாவை வைத்து படம் எடுப்பதற்கு நிச்சயம் பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்ட தொடங்கி விட்டார்கள்.
இந்நிலையில் மிகப்பெரிய ஒரு மொக்கை படமான கங்குவாவை கொடுத்த பின்பு, அடுத்த அஜித்தை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கு இருந்தாலும். அந்தப் படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் இதுவரை முன் வரவில்லை என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நிச்சயம் நடிகர் அஜித் சிறுத்தை சிவாவை கைவிட மாட்டார் என்றும்,
காரணம் அவர் சிறுத்தை சிவாவுக்கு ஏற்கனவே விசுவாசம் படம் முடிந்த போது அடுத்து ஒரு படம் பண்ணுவோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படம் தோல்வியை தழுவிய போது சிறுத்தை சிவா மீது நம்பிக்கை வைத்து மீண்டும் விசுவாசம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார் அஜித்.
அதேபோன்று அஜித்தின் நம்பிக்கையை வீணடிக்காமல் சிறுத்தை சிவாவும் விசுவாசத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றி காண்பித்தார், அந்த வகையில் அஜித் நிச்சயம் சிறுத்தை சிவாவை கைவிட மாட்டார். இருந்தாலும் அஜித் சிறுத்தை சிவாவுக்கு கால் சீட் கொடுக்க தயார், ஆனால் தயாரிப்பளார் கிடைக்காமல் அவதி பட்டு வரும் சிறுத்தை சிவாவுக்கு, அஜித்தே முன் வந்து தயாரிப்பாளரை தயார் செய்தால் மட்டுமே சிறுத்தை சிவா – அஜித் கூட்டணி உறுதி செய்யப்படும்.
அப்படி அஜித் சிறுத்தை சிவாவுக்காக தன்னுடைய சம்பளத்தை குறைந்து கொண்டு கூட சிறுத்தை சிவாவுக்கு அஜித் வாய்ப்பை பெற்று தருவார் என்றும், காரணம் கொடுத்த வாக்கையும், தனக்கு பிடித்த நபரையும் அஜித் காப்பாற்ற கூடியவர், அந்த வகையில் சிறுத்தை சிவாவை கைவிட மாட்டார் அஜித் என கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.