அஜித் அலுவகத்துக்கு போன் போட்டு கொடுத்த மோசடி நபர்.. லட்சக்கணக்கில் மோசடி.!

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் பல்வேறு உதவிகளை சத்தம் இல்லாமல் செய்து வருகின்றார்கள், அவருடைய வீட்டில் பணிபுரியும் வீட்டு காவலாளி, சமையல்காரர்கள், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை அருகே நிலம் வாங்கி அவரவர்கள் பெயரிலே சொந்தமாக வீடு கட்டி அவர்களை குடியமர்த்தி அழகு பார்த்தவர் நடிகர் அஜித்குமார். இதுபோன்று பல நல்ல விஷயங்களை சத்தம் இன்றி, விளம்பரம் இன்றி செய்து வருகின்றவர் அஜித்குமார்.

அவர் சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்து வரும் அஜித் அதை வெளிப்படுத்துவது கிடையாது. இந்த நிலையில் ஒவ்வொரு நடிகர்களின் பலமே அவருடைய ரசிகர்கள் தான், அவர்களுடைய ரசிகர்களை வைத்து தான் அடுத்தடுத்து தங்கள் மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தவர் அஜித்.

அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்திருந்தாலும், அவருக்கென்ன ரசிகர்கள் உலகெங்கும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அஜித் ரசிகர் ஒருவர் அஜித் பெயரை பயன்படுத்தி மோசடி செய்து வந்தது அம்பலம் ஆகியுள்ளது. அஜித்தின் தீவிர ரசிகர் என தன்னை காட்டிக்கொண்ட சிவா என்கின்றவர், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனக்கு மிகவும் நெருக்கமானவர் என வெளியே தெரிவித்து வந்துள்ளார்.

கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு அஜித் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டி தர இருக்கிறார் என்கின்ற ஆசை வார்த்தைகளை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் தெரிவித்துள்ளார் சிவா. ஆனால் வீடு கட்டி தருவதற்கு முதலில் பத்திரப்பதிவுக்கான செலவு ஒரு லட்சம் செலுத்த வேண்டும், அதன் பின்பு வீடு கட்டுவதற்கான 15 லட்ச ரூபா தொகை மற்றும் பத்திரப்பதிவுருக்கான தொகையும் உங்களுடைய வங்கி கணக்கில் வந்துவிடும் என்று சிவா தெரிவித்துள்ளார்.

பத்திர பதிவுக்கான தொகை ஒரு லட்ச ரூபாயை முன்கூட்டியே வாங்கியுள்ளார். மேலும் ஐயப்பன் என்பவரை நம்ப வைப்பதற்காக அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரிகின்ற நண்பர் ஒருவரிடம் பேசுகிறேன் என்று தொலைபேசியில் சிவா செட் செய்த ஆள் ஒருவரை பேச வைத்துள்ளார். இதன் பின்பு போலியாக தயார் செய்த ஒரு பத்திரத்தில் ஐயப்பனிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை சிவா மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் சிவா மோசடி செய்தது ஐயப்பனின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. ஐயப்பன் மனைவி ராஜேஸ்வரி அஜித் ரசிகர் சிவா மீது புகார் தெரிவித்து கணவன் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்று காவல்துறையிடம் முறையிட்டுள்ளார்.

வாட்ச் விவகாரம் தலைக்கு மேல் போய் விட்டது… மருமகனை காப்பற்ற திமுக தலைமை