கடந்த 2011 ஆம் ஆண்டு, அஜித் தன்னுடைய 40வது பிறந்த பிறந்த தினத்தில் மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரணமாக தமிழகமே கொண்டாடும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தார். அவர் தன்னுடைய ரசிகர் மன்றம் கலைப்பதற்கான காரணம் அப்போது கூறுகையில். நான் என்றுமே ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்தியது இல்லை.
என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை. தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கங்களை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என் எண்ணம் ஓட்டத்திற்கு உகந்ததில்லை. சமுதாயப் பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்துக்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்,
நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதை சுட்டிக்காட்டி அஜித் தலைமையின் கீழ் கசெயல்பட்டு வந்த நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் என தெரிவித்து தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தார் அஜித்குமார். பல நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தி வந்தவர்களுக்கு மத்தியில் ஒரு முன் உதாரணமாக அமைந்தது அஜித்தின் இந்த செய்லபாடுகள்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் துணிவு, மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் ஒரே தேதியில் வெளியாகி பல இடங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் ஆங்காங்கே நடைபெற்று வந்தது. மேலும் படத்தை காண்பதற்கு திரையரங்கில் கட்டுக்கடங்காத கூட்டத்தினால் பல திரையரங்குகள் கூட்டத்தை கட்டுப்படுத்த திணறியது.
அந்த வகையில் சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படத்தை முதல் ஷோ பார்க்க சென்ற ஒரு அஜித் ரசிகர், அங்கு நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி மீது நடனம் ஆடியவாறு கீழே குதித்த போது அந்த 19 வயது இளைஞனுக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் இறந்துவிட்டார், ஆனால் அஜித் துக்கம் விசாரிக்க வரவில்லை. அந்த ஏழை குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்கின்ற ஒரு விமர்சனம் எழுந்து வந்த நிலையில், இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில். அஜித் ரசிகரின் மரணத்திற்கு துக்கம் விசாரிக்க சென்றாலோ, அல்லது வெளிப்படையாக உதவி செய்தாலோ, அது தன்னுடைய ரசிகரின் மரணத்தை ஊக்குவிப்பது போன்று அமைந்துவிடும்.
ஆகையால் விரைவில் சத்தமே இல்லாமல் பாதிப்படைந்த அந்த ரசிகரின் குடும்பத்திற்கு எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் உதவி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக ரசிகர்களை நேரில் அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து, மேலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பஞ்சு பேசி தன்னுடைய ரசிகர்களை தூண்டிவிட்டு ரசிகர்களை கேடயமாக பயன்படுத்தும் விஜய் போன்றவர்கள் அஜித்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கின்றது என்கின்ற கருத்தும் நிலை வருவது குறிப்பிடத்தக்கது.