குடும்பத்தை அருகில் நெருங்க விடாத அஜித்… என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் நடிகராக, ருத்ர தாண்டவம் திரௌபதி போன்ற படங்களில் நடித்து நடிகராக அறியப்பட்டார். இவர் தொடர்ந்து சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பதற்காக மிக கடுமையாக போராடி வருகிறார். அணைத்து திறமைகளும் நடிகர் ரிச்சர்ட்க்கு இருந்தாலும் கூட அவருக்கான சரியான வாய்ப்பு இதுவரை அமையவில்லை.

நடிகர் ரிச்சர்ட் போன்று இதற்கு முன்பு பல வருடங்களாக சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க மிக கடுமையாக போராடி வந்தவர் நடிகர் அருண் விஜய், பல படங்கள் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருந்தாலும் கூட அவருக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தொடர்ந்து போராடி வந்தவர் நடிகர் அருண் விஜய்.

இந்நிலையில் இயக்குனர் கெளதம்மேனன் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில், அஜித்துக்கு வில்லனாக நடித்தார் அருண் விஜய். என்னை அறிந்தால் படத்திற்கு முன்பு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து வந்தாலும், அவருக்கு மிக பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் என்னை அறிந்தால், அஜித்துக்கு இணையாக என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய் கதாபாத்திரம் அமைத்திருக்கும்.

மேலும் அஜித் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அருண் விஜய், தன்னுடைய முழு நடிப்பு திறனையும் வெளிப்படுத்தி பரட்டை பெற்றவர், மேலும் அஜித்துக்கு வில்லனான அருண் விஜய் நடித்த பின்பு அஜித் ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு, அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களுக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவை கொடுத்தனர். மேலும் தனக்கு கிடைத்த ஆதரவை சரியாக பயன்படுத்தி கொண்டு அடுத்தடுத்து கதை மற்றும் இயக்குனர்கள் தேர்வுகளை சரியாக பயன்படுத்தி தனக்கான ஒரு இடத்தை பிடித்துவிட்டார் அருண் விஜய்.

இந்நிலையில் அருண்விஜய்க்கு தன்னுடைய படத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்து மிக பெரிய உயரத்துக்கு வருவதற்கு துணையாக இருந்த நடிகர் அஜித், தற்பொழுது சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடிவரும் அவருடைய மைத்துனர் நடிகர் ரிச்சர்ட்க்கு அஜித் நடிக்கும் படத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அருண் விஜய் போன்று ரிச்சர்ட்க்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.

ஆனால் அஜித் ஏன் தன்னுடைய மைத்துனருக்கு அதற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை என சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில். இதற்கு முன்பு அஜித் மனைவியின் தங்கை ஷாமிலி மீண்டும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வருகிறேன் என அறிவித்துவிட்டு அவர் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது என்பது போன்று அமைத்தது ஷாமிலினியின் கதாநாயகியின் கனவு.

ஆனால் அஜித் தன்னுடைய படத்தில் மனைவியின் தங்கைக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால், ஷாமிலியும் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்திருப்பார், ஆனால் அதற்கான வாய்ப்பை அஜித் தன்னுடைய மனைவியின் தங்கைக்கு கொடுக்கவில்லை, அதே போன்று தற்பொழுது சினிமாவில் போராடிக்கொண்டிருக்கும் தன்னுடைய மைத்துனருக்கு அஜித் தன்னுடைய படத்தில் நடிக்கும் வாய்ப்பை அமைத்து கொடுக்கவில்லை.

இந்நிலையில், நடிகர் அஜித் தான் நடிக்கும் படத்தின் இயக்குனரருக்கும் குறுக்கிட்டாக இருந்ததில்லை என்றும் அதே நேரத்தில் தன்னுடைய சினிமா விவகாரங்களில் குடும்பத்தை உள்ளே நுழைக்க கூடாது, தள்ளியே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கு திறமை இருந்தால் அவர்களுக்கு எதாவது ஒரு வகையில் வாய்ப்பு நிச்சயம் அமையும் என்றும், அந்த வகையில் தன்னுடைய படத்தில் குடும்ப உறுப்பினருக்கு இடமில்லை என்பது மட்டுமில்லை, மற்ற படத்திலும் சிபாரிசு கூட செய்ய மாட்டேன், என்னுடைய பெயரை பயன்படுத்தி நீங்கள் வாய்ப்பு கேட்க கூடாது என்பதில் அஜித் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.