நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதத்தில் ஒரே நாளில் நேரடியாக திரையில் வெளியானது, பொதுவாக ஒரு முன்னணி நடிகர்கள் படம் சோலோவாக வெளியாகும் பொழுது அந்தப் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் போது, அந்த இரண்டு படத்திற்குமே வசூலில் பாதிப்பு ஏற்படும்.
அந்த வகையில் அஜித் நடித்த துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வெளியிட்டது. நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வெளியிடுவதற்கு தயாராக இருந்தது, ஆனால் எந்த ஒரு காரணத்திற்காகவும் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின்ஸ் மூவிஸ்க்கு படத்தை கொடுக்கக் கூடாது என பிடிவாதமாக இருந்தார் நடிகர் விஜய்.
தயாரிப்பாளர் லலித்திடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கொடுக்க தயாரிப்பாளர் தில்ராஜிடம் விஜயை நேரடியாக சிபாரிசு செய்தார், அந்த வகையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமை லலித் வாங்கி வெளியிட்டு இருந்தார்.இந்த படம் ஆரம்பத்தில் தமிழ்நாடு திரையரங்கு உரிமை 70 கோடி பேசப்பட்டிருந்த நிலையில், வழக்கமாக விஜய் நடித்த படங்கள் சோலவாக ரிலீஸ் ஆனால், அதிக வசூலை அடையும்,
ஆனால் அஜித் படம் வெளியாகும் அதே தேதியில் வெளியாவதால் எதிர்ப்பார்த்த வசூலை எட்டாது என வாரிசு படத்தை பத்து கோடி குறைத்து 60 கோடிக்கு லலித் கேட்டுள்ளார். அந்த வகையில் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே ஒரு வேலை தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு அஜித் நடித்த துணிவு படத்தின் ரிலீஸ் தேதியன்று வாரிசு ரிலீஸ் ஆகாமல் வேறு ஒரு தேதியில் ரிலீஸ் செய்யப்பட்டால் வாரிசு படத்தின் விலை 70 கோடி என்றும்.
ஆனால் துணிவு படம் வெளியாகும் அதே தேதியில் வாரிசு படம் வெளியானால் 60 கோடிக்கும் என அக்ரிமெண்டில் குறிப்பிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அஜித் படம் வெளியான அதே தேதியில் விஜய் படம் வெளியானதால் வசூல் குறையும் என்பதை உணர்ந்து 10 கோடி குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகிறது.
மேலும் இந்த படத்தின் ஜிஎஸ்டி தொகை ஏழரை கோடி ரூபாயை படம் ரிலீஸ் செய்த பின்பு தருகிறேன் என லலித் சொன்னதற்கு அதெல்லாம் முடியாது எனக்கு பல பிரச்சனைகள் இருக்கு உடனே கட்ட வேண்டும் என்று ஜிஎஸ்டி தொகையை வாங்கிவிட்டு தான் படத்தை லலித்திடம் முழுமையாக ரிலீஸ் செய்வதற்கு தில்ராஜ் சம்மதித்தார் என்றும் கூறப்படுகிறது.