பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், சினிமாவுக்கு வருகின்றவர்கள் முதலில் சினிமா தொழிலை கற்றுக்கொண்டு வாருங்கள், எப்படி படம் எடுக்க வேண்டும் என்பது பெரிய விஷயம் அல்ல. எப்படி படத்தை வெளியிட வேண்டும், எந்த மாதிரி கூத்துக்கள் இங்கே இருக்கின்றது என்பதை படம் வெளியிட்ட பின்பு தெரிந்து கொள்வதை விட படம் வெளியிடுவதற்கு முன்பே தெரிந்து கொண்டு சினிமாவில் படம் எடுக்க வாருங்கள்.
ஒரு படத்திற்கு திரை அரங்குகளில் வெறும் நான்கு பேர் மட்டுமே வருகிறார்கள், அப்படி என்றால் எப்படி திரையரங்கு ஓனர்களால் அந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட்ட முடியும், சமீபத்தில் வெளியான டாடா, லவ் டுடே போன்ற படங்கள் மிகப்பெரிய பிரபலமான நடிகர்கள் நடித்தவை அல்ல, இருந்தாலும் அந்த படம் ஓடவில்லையா.?
பிரதீப் ரங்க நாதனை யாராவது ஹீரோவாக ஒப்புக்கொள்வார்களா.?ஆனால் ஒத்துக்கொண்டார்கள் இப்ப நானே யூடிபில் பேசுகிறேன் என்றால், சினிமாவை விட அதிகமாக வருமானம் வருகிறது, என்ன காரணம் ரசிக்கிற மாதிரி பேச வேண்டும், அது மாதிரி ரசிக்கிற மாதிரி படம் எடுக்க வேண்டும், அஜிதே பைக் ரேஸ்சில் கலந்து கொள்ள முடியவில்லை, ஒரு ஏழு வருடங்களுக்கு முன்பு என்னிடம் தான் அவர் புலம்பினார்.
எனக்கு ஸ்பான்சர் கிடைக்கவில்லை என்று புலம்பினார் அஜித்குமார், அவ்வளவு பெரிய நடிகருக்கே பைக் ரேஸில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை, ஏனென்றால் ஸ்பான்சர் கிடைக்கவில்லை என்று தான் பைக் ரேஸ் விட்டு ஒதுங்கினார் அஜித். அதன் பின்பு தான் அவருடைய பேச்சையும் நிறுத்திக் கொண்டார், அதற்கு முன்பு நிறைய பேசினார் அஜித்.
ஏனென்றால் ஒரு பைக்கின் விலை ஒன்றரை கோடி ரூபாய், யாரிடம் பணம் இருக்கிறது, எத்தனை ஜீரோ என்று எவனுக்கு தெரியும், வீட்டில் மிதி மிதி என்று மிதிக்க மாட்டார்கள், அதுவும் தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை பொருத்தவரை ரேஸ் என்று சொன்னாலே போலீசார் மிதி மிதி என்று மிதித்து விடுவார்கள், நேற்று கூட டிவியில் பாருங்கள் ரோட்டில் பைக் ரேஸ் என்று கூறிக்கொண்டு தலைகீழாக செல்கிறார்கள் என பயில்வான் பேசினார்.