கார் ரேஸ் என்பது நடிகர் அஜித்தின் கனவு, அந்த கனவு நினைவாக பல போராட்டங்கள், பல விபத்துகள் மத்தியில் துபாயில் நடக்கும் கார் ரேஸ் போட்டிக்காக, நடிகர் அஜித், கார் ரேஸிங் பயிற்சியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியபோது பலரும் கேலி கிண்டல் செய்தனர், குறிப்பாக, படப்பிடிப்பில் கார் ஓட்டினாலும் விபத்து, கார் ரேஸ் பயிற்சியில் கார் ஓட்டினாலும் விபத்து, இவரை எப்படி கார் ரேசர் என்று அழைக்கிறார்கள் என ஒரு தரப்பு கிண்டல் செய்து வந்தனர்.
அப்படி எள்ளி நகையாடியோருக்கு தன் பாணியில் பதிலடி கொடுத்து வாயை அடைத்திருக்கிறார் அஜித் குமார், துபாயில் நடைபெறும் போர்ஷே ஜிடி 911 ரேசிங் கார் பந்தயத்தில் அணியில் இருந்து கடைசி நேரத்தில் அஜித் விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது அது மட்டுமில்லாமல் அஜித் ஹாட்டர்ஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கேலி கிண்டல் செய்தனர்.
ஆனாலும் தனி நபர் போட்டியில் அஜித் களம் காண்பார் என அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடிகர் அஜித்தின் நீண்ட வருட கனவு என்பதை விட அவருடைய லட்சியம் நிறைவேறிய தருணம் தான் துபாய் பந்தயத்தின் ஒரு அங்கமான 992 பிரிவில் அஜித் குமார் ரேசிங் 3-ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.
இந்த வெற்றியின் மூலம் மகிழ்ச்சியின் உச்சிக்கே போன அஜித், குழந்தை போல் துள்ளிக் குதித்து வீரர்களோடு தோள் சேர்ந்து கொண்டாடிய காட்சி அஜித்குள் இப்படி ஒரு குணமா.? என்று பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்தது. வெற்றி பெற்ற அஜித் மேடையில் ஒரு கையில் கோப்பை மற்றும் இன்னொரு கையில் இந்திய தேசிய கோடியை வைத்து ரசிகர்களை நோக்கி காட்டி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்தார் அஜித்.
மேலும் தனது மகன் ஆத்விக்கை மேடையில் ஏற்றி அவர் கையிலும் கோப்பையை கொடுத்து மக்களுக்கு காட்ட சொன்னார் அஜித். ரேஸ் முடிந்து தனது அணியினர் மற்றும் உடன் இருப்பவர்கள் முன் அஜித் பேசியவர், மனைவி ஷாலினியை பார்த்து ஷாலு தன்னை ரேஸ் செய்ய அனுமதித்ததற்கு நன்றி என அஜித் தெரிவிக்க, அதை கேட்டு ஷாலினி கொடுத்த ரோமட்டிக் ரியாக்சன் செம்ம வைரலாகி வருகிறது.
மேலும் வெற்றி குறித்து பேசிய அஜித், துபாய்க்கு நிறைய ரசிகர்கள் நேரில் வந்திருப்பது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. நான் சொல்லப்போவது ஒன்றுதான். நீங்கள் அனைவரும் சந்தோசமாக, ஆரோக்கியமாக, மனநிம்மதியுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். குடும்பத்தை பாருங்கள், நேரத்தை வீணாக செலவழிக்க வேண்டாம்.
நன்றாக படியுங்கள், வேளைக்கு செல்வார்கள் கடுமையாக உழையுங்கள். நமக்கு பிடித்த விஷயத்தில் ஈடுபாடுடன் வேலை பார்த்து வெற்றி அடையுங்கள். வெற்றி அடைந்தால் நல்ல விஷயம், தோல்வி அடைந்தால் சோர்ந்துவிடவேண்டாம். அர்ப்பணிப்புடன் உழையுங்கள். உங்களின் அன்புக்கு நன்றி. நானும் உலகை நேசிக்கிறேன். சண்டை போடாதீங்க.
வாழ்க்கை மிகவும் குறுகியது. சந்தோசமாக இருங்கள். உங்களின் நலனையும், குடும்பத்தின் நலனையும் பாருங்கள் என அஜித் பேசியிருந்தார். மேலும் அஜித் பேசும்போது உணர்வு பூர்வமாக கண் கலங்குவது வெளியில் தெரியாமல் இருக்க கண் கண்ணாடி போட்டு கொண்டார் என ரேஸிங்ல் இருந்தவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.