அஜித் நடித்த துணிவு படத்துடன் விஜய் நடித்த நடித்த வாரிசு வெளியாகி, அடுத்து விஜய் நடித்த லியோ படமும் வெளியான நிலையில், அஜித் நடிக்க இருந்த விடா முயற்சி படம் தொடங்க படாமலே இருந்து வந்தது. மகிழ்திருமேனியை முதலில் படத்தின் முழு ஸ்கிரிப்ட் தயார் செய்து வரட்டும் அதன் பின்பு படப்பிடிப்பை தொடங்கலாம் என தெரிவித்துவிட்டு அஜித் பைக் எடுத்துட்டு ஒரு ரவுண்டு நேபால், பூட்டன் என பைக் பயணத்தை தொடங்கினார்.
ஆனால் நடிகர் அஜித் பைக் பயணத்தை முடித்து சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், மகிழ் திருமேனியிடம் இருந்து வந்த முழு ஸ்கிரிப்ட் பேப்பரில் முதல் பக்கத்தை கூட இதுவரை பார்க்காமல், காலம் தாமதம் செய்து வந்தார் அஜித். இதனால் அஜித் விடாமுயற்சி படத்தில் காமிட்டன இயக்குனர் மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் மற்றும் மற்ற டெக்கினிசன் அனைவரும், அய்யோ.. எப்ப இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாவது என அஜித்துக்காக காத்திருந்தனர்.
இதில் விடாமுயற்சி படத்தில் ஒளிப்பதிவாளராக கமிட்டாகி இருந்த நீரவ் ஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும் கூட, அஜித் படத்தில் சிக்கி கொண்டு, இதை விட்டுட்டு எப்படி வருவது என வந்த வாய்ப்புகளை தவற விட்டு கொண்டே இருந்தார். ஒரு வழியாக அனைவர்க்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில் அஜர்பைஜனுக்கு சென்று விடாமுயற்சி ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், ஷூட்டிங் பாதியிலே விட்டுட்டு அஜித் சென்னை திரும்பியுள்ளார். ஏற்கனவே அஜித்தால் தான் படப்பிடிப்பு தனமாதமாகி வருகிறது என அந்த படத்தில் கமிட்டானவர்கள் அஜித் சென்னை பயணத்தால் படப்பிடிப்பு மேலும் தாமதம் அடைந்தது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, யப்பா சாமி என்னை அளவிடுங்க, நீங்க யாரையும் வெச்சு படம் எடுங்க என விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியேறி கொள்கிறேன் என்கிற முடிவுக்கு வந்ததால், விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளராக, நீரவ் ஷாவுக்கு பதில், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தான் தற்போது ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படி அஜித்திடம் சிக்கி படத்தின் இயக்குனர் முதல் தயாரிப்பாளர் வரை அனைவரும் சிக்கி தவித்து வரும் நிலையில், அஜித்திற்கும் விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் இடையே கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சில காட்சிகளில் அஜித் மிகப்பெரிய மாற்றம் செய்யும் அளவிற்கு திருத்தங்கள் செய்ய வலியுரித்துள்ளார் அஜித், அதே போன்று அஜித்தின் நடிப்பில் திருப்தி இல்லை என மகிழ் திருமேனி மாற்றுக்கருத்து தெரிவிக்க இருவருக்கும் இடையில் மோதல் அதிகரித்துள்ளது.
இதனால் மீதமுள்ள படப்பிடிப்பில் அவுட்டோரில் எடுக்கும் காட்சிகளை மட்டும் அஜர்பைஜானில் எடுத்துக் கொள்ளுங்கள் மீதி படத்தை சென்னையில் செட் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என அஜித் தெரிவிக்க இதனால் எப்படி ஆஜர் பைஜனை சென்னையில் மேட்ச் செய்வது என குழப்பத்தில் இருக்கும் மகிழ் திருமேனி, மறுப்பக்கம் இது தயாரிப்பு நிறுவனத்துக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இப்படி அஜித்தின் அட்ரோஸிட்டி எல்லை மீறி சென்று கொண்டிருக்கையில், இனி அஜித்தை நம்பி படம் எடுக்க இயக்குனரோ, அல்லது தயாரிப்பாளரே சென்றால், அவர்களை நடு தெருவில் நிறுத்தி விடுவார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.