அஜித், விஜய்யை விடுங்க..ரஜினிக்கு பொறுப்பு வேண்டாமா.?இப்படி இளைஞர்களை சீரழிக்கலாமா.?

0
Follow on Google News

சமீபகாலமாக திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகரித்து காணப்படுகின்றன. சண்டை, கொலை, கொள்ளைக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது. கதை, பாடல்கள், திரைக்கதைக்காக படங்கள் கொண்டாடப்பட்ட காலம் மாறி, அதிரடி அடிதடி சண்டைகளுக்காகவும், அதன் சவுண்ட் எஃபெக்ட்-களுக்காகவும் படங்கள் கொண்டாடப்படுவதுதான் இன்றைய நிலையாக உள்ளது.

ஃபீல் குட் திரைப்படங்களை விட அதிரடிப் படங்கள் அதிக வசூலைக் குவிக்கின்றன. அதிலும் தற்போது வெளியாகி உள்ள நெல்சனின் ஜெயிலர் படம் மற்றும் லோகேஷ் கனகராஜன் விக்ரம் படத்தில் வன்முறை சற்று தூக்கலாகவே இருந்தது. ஒரு பக்கம் ரஜினி ஒருவரின் தலையை வெட்டுவது, இன்னொரு பக்கம் ரத்தம் சொட்ட சொட்ட கத்தி, கட்டிங் ப்ளேட் அவ்வளவு ஏன்.? நூலைக் கூட ஆயுதமாக காட்டியிருப்பது வன்முறையின் உச்சபட்சம்.

விக்ரம் படத்தின் கடைசியில் ஒரு பீரங்கியையே பற்ற வைக்கிறார் படத்தின் நாயகன் கமல். படத்தில் கதையை விட இரத்தக் களரி அதிகமாக இருந்தது என்றும் கூறலாம். குறிப்பாக பிரம்மாண்டம் மற்றும் மாஸ் ஆன சண்டைக் காட்சிகளுக்காகத்தான் இந்தப் படம் பெரிதும் பேசப்பட்டது. உச்ச நட்சத்திரங்களான விஜயின் ‘பீஸ்ட்’, அஜித்தின் ‘வலிமை’ போன்ற திரைப்படங்களிலும் ரத்தம் தெறிக்கும் துப்பாக்கிச்சூடு, சண்டை, கொலைகள் என வன்முறை காட்சிகள் அதிகமாகவே இருந்தன.

சினிமாவில் வன்முறையை ஹீரோயிஸம் ஆக காட்டுவதால் மக்கள் அதனை ரசிக்கத் தொடங்கி விட்டார்களா அல்லது மக்கள் வன்முறையை ரசிப்பதாலேயே சினிமாவில் அதிக வன்முறை காட்சிகள் இடம்பெறுகின்றதா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டரான ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படம் குறித்தும் அனைவரும் அறிந்ததே.

குறிப்பாக பிரம்மாண்டம் மற்றும் மாஸ் ஆன சண்டைக் காட்சிகளுக்காகத்தான் இந்தப் படம் பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படத்தை பார்த்து சிறுவன் ஒருவன் அதிக அளவில் சிகரெட் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலும் வேதனையை ஏற்படுத்தியது. புஷ்பா படத்தைப் பார்த்து தலைநகர் டெல்லியில் இளைஞர் ஒருவரை 3 சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதுபோன்று வன்முறை படங்கள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் ரஜினி கமல் படங்களில் எல்லாம் சமூக கருத்துக்கள் அதிகமாக இருக்கும். தற்போது அவர்கள் படத்திலேயே வன்முறைகள் அதிகமாக உள்ளது. மனிதனைக் கத்தியால் குத்துவதை அப்படியே ஒளிவு மறைவின்றி பச்சை பச்சையாகக் காட்டுகிறார்கள். ஒரு படத்தைவிட மறு படத்தில் அதிகமான வன்முறை இருக்க வேண்டும் என்று இயக்குநர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு விதியை வகுத்துக்கொண்டு செயல்படுவதுபோல் தெரிகிறது.

எது எப்படியாயினும், பொழுதுபோக்காக பார்க்கப்படும் படங்கள், நம்மை சிரிக்க வைக்கலாம். ஒருபடி மேலேபோய் நல்ல கருத்துக்கள் மூலம் சிந்திக்கவும் வைக்கலாம். ஆனால், அதுவே நமது அடுத்த தலைமுறைக்கு வன்முறையால் மட்டுமே அனைத்தையும் சாதிக்கமுடியும் என்ற விதையை மனதில் தூவ காரணமாக அமைந்துவிடக்கூடாது, ஆனால் இன்றைய சூழலில் வெளியாகும் சினிமாக்கள் இளைஞர்கள் மனதில் வன்முறையை விதைக்கும் வகையிலே வெளி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..