தப்பு சூர்யா மேல்.. அஜித் விஜய் மீது குற்றம் சொல்வது என்ன நியாயம்.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் இதுவரை இது போன்ற மொக்கை படம் வரவில்லை என்கின்ற பெயர் பெற்று மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான கங்குவா படம் உண்மையிலே மொக்க படம் என்பதை ஒப்புக்கொள்ள மனம் இல்லாமல் சாக்கு போக்குகளை சொல்லி தப்பித்து வருகிறது பட குழுவினர். அதாவது கங்குவா படம் உலக தரத்துக்கு எடுக்கப்பட்டது போன்று, ஆனால் சூர்யா மீது இருந்த தனிப்பட்ட கால் புணர்ச்சி காரணமாக,

திட்டமிட்டு அந்த படத்தை குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்களும், சில அரசியல் கட்சிகளும் வேண்டுமென்றே தோற்கடிக்க வைத்து விட்டது போன்ற பேச்சுகள் தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இதற்கெல்லாம் முக்கிய காரணம் சூர்யா பக்கத்தில் இருக்கும் ஜால்ரா டீம் தான் என்று தெரியவருகிறது. ஒரு நடிகர் தவறு செய்யும் பொழுது அவர் படத்தில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி,

இதெல்லாம் திருத்தி கொள்ள வேண்டும் என்று அந்த நடிகர் அருகில் இருக்க வேண்டியவர்கள் சொன்னால் மட்டுமே சூர்யா போன்ற நடிகர்கள் அடுத்த படத்தில் இதற்கு முன்பு செய்த தவறுகளை திருத்தி அந்த படம் வெற்றி பெறுவதற்கு உழைக்க முடியும். அதை விட்டுவிட்டு கங்குவா படத்தில் இருக்கும் தவறுகளை மூடி மறைத்து விட்டு, அதாவது கங்குவா படத்தில் எந்த ஒரு தவறும் இல்லை இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருந்தது.

இந்த படம் திட்டமிட்டு இரண்டு அரசியல் கட்சிகளும் இரண்டு ரசிகர்களும் சேர்ந்து தோல்வியடையச் செய்து விட்டார்கள் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அப்படி இரண்டு ரசிகர்கள் என்று கங்குவா தரப்பு குறிப்பிடுவது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களைத்தான். ஆனால் அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சூர்யாக்கு எதிராக இப்படி செய்வார்கள் என்றால் நிச்சயம் கிடையாது.

காரணம் சூர்யா விஜய்க்கும் அஜித்துக்கும் ஒரு போட்டியாளர் கிடையாது, ஒருவேளை சூர்யாவும் விஜயும் ஒரு சமமான போட்டியாளர், சூர்யாவும் அஜித்தும் ஒரு சமமான போட்டியாளர் என்று இருந்தால் சூர்யா படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்களோ, அஜித் ரசிகர்களோ ஒரு நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைப்பார்கள. ஆனால் சினிமா கள நிலவரமே வேறு.

இங்கு நம்பர் ஒன் இடத்தில் விஜய் அடுத்த ரஜினி அதற்கு அடுத்த அஜித் அடுத்தடுத்து வேறு நடிகர்கள் என தனுஷ் சிவகார்த்திகேயன் என பல நடிகர்கள் பின்னால் இருக்கிறார் சூர்யா, குறிப்பாக கடந்த 10 வருடங்களாக சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவுமே திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெறவில்லை.

அப்படி இருக்கும் பொழுது சூர்யா படத்தை காலி செய்வதற்கு எதற்காக விஜய் அஜித் ரசிகர்கள் திட்டமிட்ட வேண்டும். ஒருவேளை இவர்கள் சொல்வது போன்று தமிழ்நாட்டில் விஜய் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை தோல்வியடை செய்தால். கங்குவா பேன் இந்தியா படம் தானே, அப்படி என்றால் ஹிந்தியில் பிறமொழிகளில் எப்படி இந்த படம் தோல்வியை தழுவியது. அந்த வகையில் உலகம் முழுவதும் மக்கள் புறக்கணிக்க காரணம் கங்குவா என்கின்ற மொக்கை படம் என்பதை சூர்யா ஒப்புக்கொள்ள வேண்டும்.

அப்படி ஒப்புக்கொண்டால் தான் அடுத்தடுத்து படங்களில் அவர் வெற்றி பெற முடியும் இல்லை என்றால் கடந்த 11 வருடங்களாக திரையரங்குகளில் வெளியான சூர்யா படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்து வந்த வரிசையில் சூர்யா நடிக்கும் அடுத்த படங்களும் தோல்வியைத்தான் சந்திக்கும் என்று பலரும் அட்வைஸ் செய்து வருவதற்கு உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here