நடிகர் அஜித் அறிவித்துள்ள AK மோட்டோ ரைட்ஸ்ல் நிறுவனம் குறித்து பலரும் எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில், பலரும் அஜித் உடன் பயணிக்கலாம் என ஆர்வமுடன் காத்து கொண்டு பகல் கனவு கண்டு வருகிறார்கள், குறிப்பாக நம்மிடம் ஒரு பைக் இருந்தால் போதும் அஜித் உடன் AK மோட்டோ ரைட்ஸ்ல் பயணம் மேற்கொள்ளலாம் என கனவில் இருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றும், இது முழுக்க முழக்க வியாபார ரீதியில், குறிப்பாக பணம் படைத்தவர்களுக்கான ஒரு திட்டம் என்பது தெரிய வந்துள்ளது.
நிலையில் நடிகர் அஜித் சமீபத்தில் சுமார் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில் விலை உயர்ந்த பத்து பைக்குகளை வெளிநாடுகளில் ஆர்டர் செய்துள்ளதாகவும் , அந்த பைக் விரைவில் இந்தியா வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அஜித் தொடங்கியுள்ளார் AK மோட்டோ ரைட்ஸ் நிறுவனத்தில் பயன்படுத்தப்படுவதற்காக முதல் கட்டமாக 10 விலை உயர்ந்த பைக்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் AK மோட்டோ ரைட்ஸ்ல் பைக் பயணம் மேற்கொள்ள இருக்கும் நபர்கள் இந்த விலை உயர்ந்த பைக் மூலம் தான் பயணம் மேற்கொள்ள இருக்கும் நபர்களுக்கு தற்பொழுது வெளிநாட்டில் ஆர்டர் செய்யப்பட்டுள்ள 1.25 கோடி மதிப்புள்ள பைக் அவர்களின் பயணத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் AK மோட்டோ ரைட்ஸ்ல் பைக் பயணம் மேற்கொள்ள இருக்கும் பைக் ரைடர்ஸ் அவர்கள் சொந்த பைக் எடுத்து வர வேண்டிய அவசியம் இல்லை.
அதே நேரத்தில் AK மோட்டோ ரைட்ஸ்ல் பைக் ரெய்டு செல்ல இருக்கும் ரைடர்ஸ்க்கு அந்த நிறுவனத்தில் சார்பில் பயணத்திற்கு கொடுக்கப்பட இருக்கும் பைக்குக்கு சேர்த்து தான் கட்டணம் வசூல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தாங்கள் சொந்தமாக பைக் கொண்டு வருகிறோம், பைக் கட்டணம் மட்டும் வேண்டாம் என்றால் அதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது, AK மோட்டோ ரைட்ஸ்ல் நிறுவனம் சார்பில் கொடுக்க இருக்கும் பைக்கில் தான் ரைடர்ஸ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிற விதிமுறையை பின்பற்ற வேண்டுமாம்.
இதற்கு காரணம், ரைடர்ஸ் கொண்டு வரும் பைக் எந்த கண்டிஷனில் இருக்கிறது என்பது AK மோட்டோ ரைட்ஸ்ல் நிறுவனம் தரப்புக்கு தெரியாது, செல்லும் வழியில் ரைடர்ஸ் சொந்தமாக கொண்டு வரும் பைக் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வது கடினம்,ஆனால் AK மோட்டோ ரைட்ஸ்ல் நிறுவனம் தரப்பில் கொடுக்கப்படும் பைக்கில் பயணம் மேற்கொள்ளும் போது, பைக்கில் எதாவது பழுது என்றால், உடன் பயணிக்கு AK மோட்டோ ரைட்ஸ்ல் நிறுவனத்தை சேர்ந்தவர்களே எளிதாக சரி செய்து விடுவார்கள்.
அந்த வகையில் AK மோட்டோ ரைட்ஸ்ல் பயணம் மேற்கொள்ளும் ரைடர்ஸ் அந்த நிறுவனம் கொடுக்க இருக்கும் பைக்கில் தான் பயணம் மேற்கொள்ள வேண்டும், அந்த வகையில் ஒருவர் ஏகே மோட்டோ ரைட்ஸ் நிறுவனத்தில் பைக் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
AK மோட்டோ ரைட்ஸ்ல் பயணம் மேற்கொள்ளும் நபர்களுடன் அஜித் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும், அஜித்துக்கு கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் தான் ரைக்டர்ஸை வழிநடுத்துவார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஏகே மோட்டோ ரைடில் பங்கு பெறுபவர்கள் அஜித்தை நேரில் சந்திக்கலாம், பேசலாம் என்கின்ற அவர்களின் கனவு பலிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது
ஆனால் பைக் பயணத்தை முடித்துவிட்டு வருகின்றவர்களுக்கு, இறுதியில் பைக் பயணத்தை மேற்கொண்டவர்களுக்கு அஜித் பரிசு கொடுத்து ஊக்குவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆனால் தன்னுடைய தொழிலை மேலும் வியாபார ரீதியாக வளர்ச்சி அடைவதற்கு அஜித் நேரில் வந்து பயணத்தில் பங்கு வருவதற்கு இறுதியாக பரிசளிப்பதற்கு வாய்ப்பு அமையலாம் என்றும், அதே நேரத்தில் ஆரம்ப கட்டத்திலேயே இந்த தொழில் நல்ல வரவேற்பு இருந்தால், பரிசு கொடுத்து ஊக்குவிப்பதை கூட அஜித் தவிர்ப்பார் என கூறப்படுகிறது. குறிப்பாக பணம் படைத்தவர்கள் மட்டுமே AK மோட்டோ ரைட்ஸ்ல் பைக் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் சில்லறையை சிதற விடும் அப்பாவி பணம் இல்லாத ரசிகர்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.