நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ள அஜித் குமார் ரேசிங் என்கின்ற ஒரு கார் ரேஸ் அணியை உருவாக்கி, துபாயில் அந்த அணி பங்கேற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது, ஆனால் இந்த அஜித் குமார் ரேசர் அணியினர் பங்கேற்ற இந்த போட்டியில் அஜித் பங்கேற்கவில்லை. அவருடைய அணியின் சார்பாக நான்கு வீரர்கள் பங்கேற்றார்கள்.
இந்த நிலையில் இந்தப் போட்டி முடிந்ததும் நடிகர் அஜித்குமார் ஒரு பேட்டியளிக்கிறார், அதில் ரசிகர்கள் யாரும் சண்டை போட வேண்டாம் என்று தெரிவிக்கிறார். இதை மறைமுகமாக விஜய் ரசிகர்களுடன் அஜித் ரசிகர்கள் சண்டையிட வேண்டாம் என்று தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்பொழுது விஜய் சினிமா வேண்டாம் என்று அரசியல் ரேசில் ஒரு பக்கம் சென்று விட்டார்.
அஜித் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகி கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். இப்படி ஒரு காலகட்டத்தில் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் சண்டை போடக்கூடாது என மறைமுகமாக அட்வைஸ் செய்யும் அஜித்குமார். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வெளிப்படையாக என்னுடைய ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் ரசிகர்களுடன் சண்டையிட வேண்டாம் என்று தெரிவித்து இருந்தால் எவ்வளவோ பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும்.
ஆனால் சினிமாவில் நடிக்கும் பொழுது தன்னுடைய சக போட்டியாளரின் ரசிகர் உடன் சண்டையிடாதீர்கள் என்று சொல்லாத அஜித், தற்பொழுது சினிமாவை விட்டு விஜயும் அஜித்தும் விலகி வரும் சூழலில் தெரிவிப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை. இந்த நிலையில் நடிகர் அஜித் அணியினர் பங்கேற்று வெற்றி பெற்றதற்கு சினிமா துறையில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில்.
நடிகர் விஜய், அஜித்துக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை, இதற்கு காரணம் சக நடிகனான அஜித், விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்த போது, அஜித் தரப்பிலிருந்து வாழ்த்து வரவில்லை. அதனால் நாம் எதற்கு இதற்கு வாழ்த்து தெரிவிக்கலாம் என்று கூட விஜய் அமைதியாக இருக்கலாம்.
இந்த நிலையில் அஜித் ஒரு ஸ்பான்சர் ஆக மட்டுமே அவருடைய அணியின் உரிமையாளராக பங்கேற்ற அந்தப் போட்டியில், வெற்றி பெற்றதற்காக வரிந்து கட்டி வாழ்த்து தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள் யாரும், இதற்கு முன்பு விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் செய்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ஒலிம்பிக் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து அவர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு முன்பு ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த காலத்தில், தன்னுடைய அணியில் பி வி சிந்துவை தேர்ந்தெடுத்து அவருக்கு ஸ்பான்சர் செய்தவர் விஜய் பிரபாகரன், அந்த வகையில் பிவி சிந்துவை ஒலிம்பிக் வரை கொண்டு செல்வதற்கு விஜயகாந்த் மகனும் ஒரு காரணமாக இருந்தார்.
இன்று நடிகர் அஜித்க்கு பாராட்டு தெரிவிக்கும் யாரும் அன்று ஒரு ஒலிம்பிக் வீராங்கனை உருவாக்க ஸ்பான்சர் செய்த விஜய் பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை, அந்த வகையில் ஒருவரின் வெற்றி கூட ஆட்களைப் பொறுத்து தான் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் சூழல் இங்கே உள்ளது என்று பலரும் ஆதங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது