மன்னிப்பு கேட்கிறாரா சூர்யா.? களத்தில் இறங்கிய வன்னியர் சங்கம்.. சூர்யா படம் வெளியாவதில் சிக்கல்..

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜெய்பீம் இந்த படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் பெரும் சர்ச்சையாக வெடித்தது, வன்னிய சமூகத்தின் அடையாளமான அக்னி கலசத்தை குறியீடாக வைத்து ஒட்டு மொத்த வன்னிய சமூகத்தையும் இழிவு படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைந்துள்ளது என்றும், மேலும் மறைந்த வன்னிய சங்க தலைவர் காடு வெட்டி குரு பெயரை திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள வில்லன் கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டதாகவும் குற்றசாட்டு எழுந்த நிலையில்.

இந்த படத்துக்கு எதிராக வன்னிய சங்கத்தினர் மற்றும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் இது குறிப்பாக வன்னிய சமூகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கடும் கண்டன குரல் எழுந்தது, ஆனால் நடிகர் சூர்யா தனக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளை சிறிதும் கண்டுகொள்ளாமல், அலட்சிய படுத்திவிட்டு தான் நடிக்கும் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்நிலையில் வரும் மார்ச் 10ம் தேதி சூர்யா நடிப்பில் எதற்கும் துணித்தவன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இது தான் சரியான தருனம், தங்களின் உணர்வுகளை அலட்சிய படுத்திய சூர்யாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என களத்தில் இறங்கியுள்ளது வன்னியர் சங்கம், மயிலாடுதுறை மாவட்டம் வன்னியர் சங்கம் தலைவர் துரை.முத்து என்பவர் மயிலாடுதுறை மாவட்டம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் டி.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை (2D Entertainement) நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க,

SI அந்தோணிசாமி என்ற தலித் கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல காட்டியுள்ளார்.

சகோதரத்துவமான உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒளிப்பரப்ப அனுமதிக்க கூடாது என வன்னியர் சங்கம் சார்பாகவும்,

மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் என வன்னிய சங்க மாவட்ட தலைவர் கடிதம் எழுதியுள்ளதால், மயிலாதுறையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள் என கூறப்படுகிறது, மேலும் இதே போன்று அடுத்தடுத்து மாவட்டங்களிலும் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைபடத்துக்கு எதிராக களத்தில் இறங்க ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர் வன்னியர் சங்கம் என கூறப்படுகிறது.

திருட்டுத்தனம் செய்து சிக்கிய அட்லீ… இந்தியில் இருந்து துரதியடிக்கப்படுகிறார் அட்லீ.. என்ன செய்து மாட்டினார் தெரியுமா.?