பரிதாபங்கள் என்ற youtube சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் கோபி-சுதாகர்.அன்றாட வாழ்வில் நடக்கும் பல்வேறு விஷயங்களை காமெடி கண்டெண்டுகளாக உருவாக்கி வீடியோக்களாக வெளியிட்டு வரும் இவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கிட்டத்தட்ட 56 லட்சம் சப்ஸ்கிரைபர்களின் ஆதரவுடன் பரிதாபங்கள் சேனலை இன்றுவரை வெற்றி கரமாக நடத்தி வருகின்றனர்.
இவர்களை இன்றைய கால கவுண்டமணி செந்தில் என்றே கூறலாம். அந்த அளவிற்கு கோபி சுதாகர் காம்போவில் வெளியாகும் காமெடி வீடியோக்கள் அனைத்தும் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.கோபி சுதாகர் இருவருக்குமே காமெடி நன்றாக வரும் என்பதால், ஆரம்பத்தில் இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள். ஆனால், அங்கு அவர்களின் திறமைக்கு தகுந்த வாய்ப்புகள் கொடுக்கப்படாததால், தாங்களே சொந்தமாக யூடியூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்கள்..
கோபியின் மிமிக்ரியும், சுதாகரின் நக்கலான பாடி லாங்குவேஜ் மற்றும் நகைச்சுவையான வசனங்களும் இணையத்தில் படு வேகத்தில் பிரபலமாகிவிடும்.இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் பிரபலங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் கோபி சுதாகருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. அவர்களும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சில படங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படி யூடியூப் சேனல் மூலம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் கோபி சுதாகர் இருவரும் படம் தயாரிக்கப் போவதாக கூறிய ஆறு கோடி ரூபாய் வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து க்ரவுட் ஃபண்டிங் செய்து ஏமாற்றிவிட்டதாக சமீப காலமாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பணத்தை பறிகொடுத்த பலரும் “கோபி சுதாகர் தரப்பினர் படம் தயாரிக்கப் போவதாக கூறி கிரவுட் ஃபண்டிங் மூலம் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் இடம் இருந்து ஆறு கோடி ரூபாய் வரை வசூல் செய்தார்கள்.
ஆனால் அவர்கள் சொன்னபடி எதுவும் செய்யவில்லை அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை.” என்று இணையத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து கோபி சுதாகருக்கு எதிராக சர்ச்சை கிளம்பியது.பொதுமக்களிடமிருந்து பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டதாக பலரும் கோபி சுதாகர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
இது குறித்து அவர்கள் பேசுகையில், க்ரவுட் ஃபண்டிங் மூலம் பணம் வசூலிப்பது அவற்றை நிர்வகிப்பது போன்ற பொறுப்புகளை பிரவீன் ஜெயக்கொடி என்பவரிடம் ஒப்படைத்ததாகவும், ஆரம்பத்தில் வசூல் தொகை கணக்கு வழக்குகளை எல்லாம் முறையாக நிர்வகித்து வந்த பிரவீன் ஜெயக்கொடி, நாட்கள் செல்ல செல்ல பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து விட்டு, படப்பிடிப்பிற்காக பணத்தை செலவு செய்து விட்டதாக பொய் சொல்லி தங்களை ஏமாற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களாக பிரவீன் ஜெயக்கொடியின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வந்த கோபி சுதாகர், சந்தேகத்தின் பெயரில் அவர் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கின்றனர். பிரவீன் ஜெயக்கொடி முறைகேடு செய்தது காவல்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
கோபி சுதாகர் இருவரும் ஏமாற்றப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், பொதுமக்கள் பணத்தை இழந்து தவிர்க்கக்கூடாது என்பதற்காக அவர்களின் பரிதாபங்கள் சேனலில் இருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள்.தற்போது இவர்களெடுக்கும் படத்தின் பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வெகு விரைவில் பல பிடிப்புகள் முடிக்கப்பட்டு வெளியாகும் என்று கோபி சுதாகர் தெரிவித்து இருக்கிறார்கள்.