பேரம் பேத்தி எடுக்குற வயசுல ஏ ஆர் ரகுமானுக்கு இது தேவையா… பாவம் அவர் மனைவி என்ன செய்வார்…

0
Follow on Google News

ஏ ஆர் ரகுமான் மனைவி சாயிரா பானு அவருடைய கணவரை விட்டு பிரிவதாக அறிவித்த அடுத்த நாள் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய பிரிவை உறுதி செய்தார். இந்த நிலையில் எத்தனையோ குடும்பங்கள் கணவன் மனைவிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், குழந்தைகளுக்காக பல தியாகங்களை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது 29 வருட திருமண வாழ்க்கை, மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை திருமணம் முடிந்து விட்டது, அடுத்த திருமண வயதில் இரண்டு குழந்தைகள்.

இப்படி இருக்கும் காலகட்டத்தில், குறிப்பாக பேரன் பேத்தி எடுக்க வேண்டிய காலகட்டத்தில் ரகுமானை வீட்டு அவருடைய மனைவி சாய்ரா பானு விலகுவதாக அறிவித்ததின் பின்னணியில் என்ன என்கின்ற சில தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஏ ஆர் ரகுமான் அதிகம் குடும்பத்துடன் செலவிட மாட்டார் என்கின்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், ஏ.ஆர். ரகுமான் தற்போது இசையில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கிறார்.

துபாய் மும்பை என பல இடங்களில் ஸ்டூடியோ அமைத்து மிகப்பெரிய அளவில் வருமானத்தை ஈட்டி வருகிறார் ஏ ஆர் ரகுமான். அந்த வகையில் இன்னும் அதிகபட்சம் போனால் ஏ ஆர் ரகுமான் இன்னும் சில வருடங்கள் இதுபோன்று பிஸியாக இருக்கலாம். அடுத்து குடும்பத்துடன் நேரம் செலவிடலாம். அப்படி இருக்கும் பொழுது ரஹுமானை விட்டு அவருடைய மனைவி பிரிவது பின்னணியில் ஏ ஆர் ரகுமானுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனையை ஒரு தரப்பினர் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஏ ஆர் ரகுமான் மனைவியை பட்விஸ்ட் செய்து விட்டிருக்கலாம் என்கின்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ராம் முழுக்க முழுக்க இது கோபத்தின் உச்சியில் ஆத்திரத்தின் எடுத்த முடிவு தான் என்றும், ஏ ஆர் ரகுமானை திருமணம் செய்து கொண்ட பின்பு சாய்ரா பானு அவர் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் மனைவி எங்கே சென்றாலும் ஏ ஆர் ரகுமான் மனைவி என்கின்ற அங்கீகாரத்துக்கான சிவப்பு கம்பளம் மரியாதை என உலகம் முழுவதும் சுற்றி வந்த ஏ ஆர் ரகுமான் மனைவி சாயிரா பானு.

தன்னுடைய கணவர் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கிறார் தனக்கு திருமண வயதில் குழந்தைகள் உள்ளது இதையெல்லாம் தாண்டி ஏ ஆர் ரகுமானை திட்டமிட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் கோபத்திலும் ஆத்திரத்திலும் ஏ ஆர் ரகுமான் மனைவி இந்த முடிவை எடுத்து கணவர் ரஹ்மானை விட்டு பிரிவதாக அறிவித்ததாக சினிமா வட்டாரத்தில் ஒரு விவாதம் சென்று கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஏ ஆர் ரகுமான் இசை குழுவில் கித்தார் வாசிக்கும் பெண்ணுடன் தொடர்புபடுத்தி வரும் தகவல்கள் எதுவுமே உண்மை இல்லை என்றும், ஏ ஆர் ரகுமான் இதுவரை எந்த ஒரு பெண்ணையும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தது கூட கிடையாது. மிஸ்டர் கிளீன் என்கின்ற பெயருடன் இருக்கிறார். அந்த வகையில் ஏ ஆர் ரகுமானை மிகப்பெரிய அளவில் டேமேஜ் செய்ய வேண்டும் என்பதற்காக தான் அவருடைய இசைக்குழுவில் வேலை செய்த மோனிகா டே அவருடைய கணவரை விட்டு பிரிவதையும்,

ஏஆர் ரகுமான் மனைவி அவருடைய கணவரை விட்டு பிரிவதையும் ஒன்றிணைத்து ஏ ஆர் ரகுமானையும் மோனிகா டேவையும் இணைத்து வைத்து கிசுகிசுகள் வருகிறது ஆனால் இது எந்த விதத்திலும் உண்மை இல்லை என்றும், ஏ ஆர் ரகுமானுக்கும் அவருடைய மனைவி சாய்ரா பானுக்கு நடந்த சிறு சிறு பிரச்சனைகளால் கோபத்தின் உச்சியில் சென்று தன்னுடைய கணவரை விட்டு பிரிவதாக தான் சாய்ரா பானு இந்த முடிவை எடுத்தார் என்று கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here