ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து டிக்கெட் எடுத்து சென்றவர்களுக்கு துன்பமும், துயரமும் தான் கிடைத்துள்ளது, டிக்கெட் வைத்திருந்தும் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை, அந்தஅளவுக்கு கூட்டம் இருந்தது. சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க்க கூடிய நிகழ்ச்சியில் 40 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தான் இந்த குளறுபடிக்கு காரணம் என கூறப்படுகிறது.
லட்சக்கணக்கானோர் மூச்சு விட கூட முடியாத அளவுக்கு நெரிசலில் சிக்கி உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்து வந்துள்ளனர், ரகுமானின் இசையை விட குழந்தைகளின் அழும் குரல் நிகழ்ச்சி நடந்த இடங்களில் கேட்க முடிந்தது, ஆயிரக்கணக்கில் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்றும் மேலும் ஏ ஆர் ரகுமான் மிகப்பெரிய ஸ்கேம் செய்துவிட்டார் என்றல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரகுமான் இசை நிகழ்ச்சியில் பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை ஏற்பட்டதாக பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பார்ப்பவர்கள் கண் கலங்க வைத்துள்ளது.அந்த பெண் தன்னுடைய சமூக வலைதளத்தில் , என் இதயத்தில் இவ்வளவு பாரம் இருந்ததால் இதை சொல்கிறேன். இன்று எனக்கு இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வு என்னை ஆட்டிப்படைக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை கச்சேரிக்குப் பிறகு என்னைப் பிடித்தவர்களில் ஒருவர், நான் அவரிடம் வழி கேட்டபோது என் கண்களைப் பார்த்தார். அப்போது நான் சோர்வடைந்து இருந்தேன் அப்போது அந்த நபர் என்னை பாலியல் ரீதியாக தொட்டார் என்று தன்னுடைய கைகள் நடுங்கும் வீடியோவுடன் பெண் ஒரு பதிவிட்டுள்ளார்.இதற்கு பலரும் கடும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆறுதல் சொல்வதர்க்கு பதிலாக பின்னனி பாடகி ஸ்வேதா மோகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பதிவை சுட்டி காட்டி, இந்த ட்வீட்டை புறக்கணிக்க முடியவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அமைதி, அன்பு மற்றும் மனிதநேயத்திற்காக நின்ற ஒரு ஐகானின் இசை நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் ரசிகர்கள் ஏ.ஆர்.ஆர் சாரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தகுதியானவர்களா? ஒவ்வொரு கச்சேரியிலும் அவர் பெண்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை நினைவூட்டும் வகையில் பாடல்கள்களை டெடிகேட் செய்பவர். வலிமையாக இருங்கள், #சிங்கப்பெண்ணே!! நாம் ஒரு கேவலமான சமுதாயத்தில் வாழ்கிறோம். என் இதயம் உனக்காகத் துடிக்கிறது. இதை கடந்து மீண்டும் எழ உங்களுக்கு தேவையான ஆற்றலை அனுப்புகிறேன்” என பதிலளித்து இருந்தார் ஸ்வேதா மோகன்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடியால், சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க கூடிய நிகழ்வில் 50 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்பனை செய்து மோசடியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடியால் பொது மக்கள் பலரும் கடும் வாதிக்குள்ளாகி உள்ளனர், குறிப்பாக ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஆனால் குளறுபடி செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கண்டிக்காமல், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை குறை சொல்லி வரும் பின்னனி பாடகி ஸ்வேதா மோகனுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது, மீண்டும் ஏ ஆர் ரகுமான் இசையில் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவும், அவருடைய கச்சேரியில் பாட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக இது போன்று ஏ ஆர் ரகுமானுக்கு ஜால்ரா போடுவதா என பலரும் ஸ்வேதா மோகன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.