மறைந்த லதா மங்கேஷ்கர் பற்றி யாரும் அறிந்திராத கொடூர குணம் தெரியுமா.? எல் ஆர் ஈஸ்வரி சொன்ன தகவல்..

0
Follow on Google News

பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா மற்றும் நிமோனியா காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார், அவர்க்கு வயது 92. இந்தி திரையுலகின் முன்னணி பாடகியாக இருந்த லதா மங்கேஷ்கர் மரணம் சினிமா துறையை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லதா மங்கேஷ்கர் தமிழில் பணியாற்றிய ஒரே இசை அமைப்பாளர் இளையராஜா மட்டும் தான், இளையராஜா இசையில் 1987இல் தமிழில் இவர் நேரடியாக பாடிய முதல் பாடல் ‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி’ படத்தில் ‘இங்கே பொன் வீணை’ என்ற பாடல்தான், அனால் அந்த படம் வெளியாகவே இல்லை, மீண்டும் இளையராஜா இசையில் பிரபு நடித்த ‘ஆனந்த்’ திரைப்படத்தில் ‘ ஆராரோ ஆராரோ’ பாடலை பாடினார்.

இதனை தொடர்ந்து இளையராஜாவின் இசையில், கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ திரைப்படத்தில் ‘வளையோசை கலகலவென’ பாடலை பாடினார்,இந்த பாடல் மிக பெரிய ஹிட் கொடுத்தது, கார்த்தி நடித்த ‘ என் ஜீவன் பாடுது’ படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை பாடியிருந்தார் அவர். இதுதான் அவர் கடைசியாக பாடிய தமிழ் பாடல் இதன் பின்பு தமிழில் லதா மங்கேஸ்கர் எந்த ஒரு பாடலும் படவில்லை.

இந்நிலையில் மிக பெரிய பாடகியாக லதா மங்கேஷ்கர் கொண்டாடப்பட்டாலும், அவரை பற்றி பலரும் அறிந்திராத கொடூரமான குணம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது, அதில் இந்தி சினிமாவில், லதா மங்கேஸ்கர் மற்றும் அவரது சகோதரி ஆஷா கோஷல் இருவரும் இந்தி சினிமாவின் இசையில் ஒரு மாஃபியா போன்று செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அங்கே இந்த இருவரை தவிர மற்ற யாரும் வளர்ந்து விட கூடாது என்பதில் தீவிரமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தென்னிந்தியாவில் புகழ் பெற்ற பாடகியான, சுசிலா, ஜானகி மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற பாடகிகளுக்கு இந்தியில் படும் வாய்ப்புகள் வந்தால் கூட எங்கே அவர்களை இந்தி சினிமாவில் நுழைய விட்டால், தங்களை தாண்டி வளர்ந்து விடுவார்கள் என்பதால் தங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி அதை தட்டி பறித்து விடுவார்கள் இந்த சகோதரிகள் என கூறபடுகிறது. இது குறித்து தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற பின்னணி பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரி பேட்டி ஒன்றில் கூறுகையில், முத்து குளிக்க வாரீகளா பாடலை ஆஷா கோஷல் ஹிந்தியில் பாடுவதற்கு முன்பு,

அந்தப்படத்தின் தயாரிப்பாளர் முகமது, என்னை பாட வைப்பதற்காக என் வீட்டிற்கு வந்து இந்தப் பாடலை நீங்கள்தான் ஹிந்தியில் பாட வேண்டும் என்று ரொம்ப விரும்பி கேட்டுக் கொண்டார். அதற்கேற்றார் போல் நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால் அந்த காலத்தில் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா கோஷல் இந்த இரண்டு சகோதரிகளும் இந்தியில் வேறு யாரும் பாடல் பாடுவதற்கு உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என தெரிவித்த எல் ஆர் ஈஸ்வரி.

இருந்தாலும் கடவுளோட அருளால் தமிழில் முத்து குளிக்க வாரீகளா பாடல் மெகா ஹிட்டானது,ஏனென்றால் நாம் அடக்கமாக இருந்ததனால் என எல். ஆர்.ஈஸ்வரி, கவிஞர் வாலி உடன் நடந்த நேர்காணலில் தெரிவித்தார், அப்போது எல்லாம் தெரியும், இருந்தாலும் வெளியில் சொல்ல கூடாது என இருந்தேன் என கவிஞர் வாலியும் லதா மங்கேஸ்கர் மற்றும் ஆஷா கோஷல் சகோதரிகள் இந்தி திரையுலகில் மாபியா போன்று செயல்பட்டதை உறுதி செய்துள்ளார்.