மணிரத்தினம் – ஏ.ஆர்.ரகுமான் உச்சக்கட்ட மோதல்… பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைக்க மாட்டேன்..

0
Follow on Google News

பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து மற்றும் இசைஞானி இளையராஜா இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட மோதலின் உச்சம் இருவரும் இனி இணைந்து பணியாற்ற முடியாது என்கின்ற முடிவுக்கு வந்து பிரிந்தனர். இசைஞானி இளையராஜா 80 மற்றும் 90களில் இசையில் உச்சத்தில் இருந்த காலம் அது, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக இருந்தார்.

இந்த நிலையில், தன்னுடைய இசையில் பாட்டு எழுத வைரமுத்துக்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு இளையராஜா வந்தவுடன் வீட்டிலே முடங்கினார் வைரமுத்து. இந்தக் காலகட்டத்தில் இளையராஜாவுக்கு போட்டியாக ஒரு இசையமைப்பாளரை உருவாக்க வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்தார் வைரமுத்து. அப்போது இளையராஜா மீது ஏற்கனவே அதிருப்தியில் இருந்த மணிரத்தினம், மற்றும் கே.பாலச்சந்தர் ஆகியோர் வைரமுத்து உடன் கைகோர்த்தனர்.

அந்த வகையில் கே.பாலச்சந்தர் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் வைரமுத்து பாடல் வரிகள் எழுத ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரகுமான். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்து, அடுத்த மிகக் குறுகிய காலத்தில் இளையராஜாவுக்கு போட்டியாக மிகப்பெரிய உச்சத்திற்கு சென்ற ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து இசையமைக்கும் அனைத்து படங்களிலும் வைரமுத்து தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியராக இடம் பெற்று வந்தார்.

மணிரத்தினம் – ஏ.ஆர்.ரகுமான்- வைரமுத்து கூட்டணி பிரியாத கூட்டணியாக தொடர்ந்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்தினம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் முதல் முதலாக வைரமுத்து இடம்பெறாமல் போனது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வைரமுத்து மீது கடந்த சில வருடங்களுக்கு முன்பு பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

சின்மயியை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். அதே நேரத்தில் ஏ.ஆர்.ரகுமான் சகோதரி ரெஹானாவும் வைரமுத்துவால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானேன் என்கிற பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்தார். இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து உடனான தொடர்பை ஏ.ஆர்.ரகுமான் துண்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக வைரமுத்துவுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்து வந்த ஏ.ஆர்.ரகுமான், மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து உடன் இணைந்து பணியாற்றும் சூழலை மணிரத்தினம் உருவாக்கினார். ஆனால் வைரமுத்து உடன் இனி இணைந்து என்னால் பணியாற்ற முடியாது, பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல் எழுத வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நான் இந்த படத்திற்கு இசை அமைக்க மாட்டேன் என தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்.

வேறு ஒரு இசை அமைப்பாளரை வைத்து பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை அமைத்து கொள்ளுங்கள் என்று மணிரத்தினிடம் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒரு இக்கட்டான சூழலில் வைரமுத்து – ஏ.ஆர் ரகுமான் இருவரில் யாரை தேர்வு செய்வது என்கின்ற சூழலுக்கு தள்ளப்பட்ட மணிரத்தினம், இறுதியில் ஏ.ஆர். ரகுமானை தேர்வு செய்து பாடலாசிரியர் வைரமுத்துவை பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறாமல் தவிர்த்துள்ளார் மணிரத்தினம்.

மேலும் வைரமுத்துவை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை மணிரத்தினம் விளக்கிச் சொன்னதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு படமான பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது என கூறப்படுகிறது.