பா.ரஞ்சித் செய்த டுபாக்கூர் வேலை… வெளிநாடுகளில் பா.ரஞ்சித் படம் வெளியாவதில் சிக்கல்.. என்ன டுபாக்கூர் தெரியுமா.?

0
Follow on Google News

தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியும், தயாரித்து வருகின்றவர் இயக்குனர் பா ரஞ்சித். சினிமாவில் மட்டும் இல்லாமல் பொது இடங்களிலும் அவர் சார்ந்த சமூக கருத்துகளை தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றவர் பா ரஞ்சித். இருந்தும் அவர் கருத்துக்கு ஆதரவாகவும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் உண்டு.

இந்த நிலையில் ஒரு இயக்குனராக சினிமா படங்கள் இயக்குவது மட்டுமின்றி,நிலம் ப்ரொடக்ஷன் என்கின்ற பெயரில் படமும் தயாரித்து வருகிறார் பா ரஞ்சித். இவருடைய தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ரைட்டர். இந்த படத்தில் நடிகர் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பொதுவாக ஒரு படத்தின் வெளிநாட்டு விநியோகம் என்பது வெளிநாடுகளில் உள்ள தியேட்டர் ரிலீஸ், சாட்டிலைட் உரிமை, மற்றும் ஓடிடி அனைத்தும் உள்ளடக்கியது.

ஆனால் ரைட்டர் படத்தை ஒரு குறிப்பிட்ட விநியோகஸ்தருக்கு விற்பனை செய்த அந்த படத்தின் தயாரிப்பாளர் பா. ரஞ்சித், மேலும் மலேசியாவில் உள்ள அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சிக்கு இந்த படத்தை விற்பனை செய்துள்ளார். இதனால் ரைட்டர் படத்தை வெளிநாடு விற்பனைக்கு வாங்கிய விநியோகஸ்தருக்கும் மற்றும் பா.ரஞ்சித் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில், ரைட்டர் படத்தை வாங்கிய வெளிநாடு விநியோகஸ்தர் பா.ரஞ்சித்திடம் விளக்கம் கேட்டிருந்தார். மேலும் பா ரஞ்சித் விதிமுறையை மீறி தனியாக மலேசியாவில் உள்ள அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்பனை செய்ததால், இந்த படத்தை வெளிநாடு விநியோகத்திற்கு வாங்கிய தனக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

இதனால் அப்போதைக்கு இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக வெளிநாடு விநியோக உரிமையை பெற்ற விநியோகஸ்தருக்கு ஏற்பட்ட 15 லட்சம் ரூபாய் நஷ்ட தொகையை தயாரிப்பாளரான தான் தருவதாக பா.ரஞ்சித் உறுதியளித்துள்ளார். இதன் பின்பு அஸ்ட்ரோ வானவில்லில் இந்த படம் ரிலீஸ் ஆனது. ரைட்டர் படத்தின் வெளிநாடு விநியோ உரிமை பெற்ற விநியோகஸ்தர் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை பா.ரஞ்சித் எடுப்பதில்லை.

மேலும் பா.ரஞ்சித் உதவியாளரை தொடர்பு கொண்டால் முறையான பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சொன்ன வாக்குப்படி பா.ரஞ்சித் 15 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். அப்போதைக்கு பிரச்சனையில் இருந்து தப்பித்தால் போதும் என்பதற்காக, நஷ்ட தொகை 15 லட்சம் ரூபாயை தான் தருகிறேன் என்று பா.ரஞ்சித் செய்வது மிகப்பெரிய டுபாக்கூர் வேலை என்று புலம்பி வருகிறார் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்.

இந்நிலையில், வெளிநாடு விநியோஸ்டர் கூட்டமைப்பினரின் கவனத்திற்கு இந்த பிரச்சனை சென்றுள்ளதால், பா.ரஞ்சித் பாதிக்கப்பட்ட விநியோகத்தருக்கு 15 லட்சம் ரூபாய் செட்டில்மெண்ட் செய்யவில்லை என்றால் பா.ரஞ்சித் படம் இனி வெளிநாடுகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.