கண்டு கொள்ளாத விஜய்… திரிஷாவுக்கு மறுவாழ்வு கொடுத்த அஜித்குமார்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை திரிஷா முன்னணி நடிகைகளில் ஒருவர், அவர் நடிப்பில் வெளியான சாமி படத்துக்கு பின்பு மிக பெரிய உச்சத்துக்கு சென்ற திரிஷா அடுத்து விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது,இதனை தொடர்ந்து விஜய் உடன் மீண்டும் ஜோடி சேர்ந்து வெளியான திருப்பாட்சி வெற்றியை தொடர்ந்து அஜித் உடன் ஜி படத்திலும் விஜய் உடன் ஆதி என ஒரே நேரத்தில் இருவருடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்த படம் தோல்வியை தழுவியது.

இதன் பின்பு ஒரே நேரத்தில் மூன்று முன்னணி நடிகர்களான அஜித் உடன் கிரீடம், விஜய் உடன் குருவி, விக்ரம் உடன் பீமா என ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்த அணைத்து படங்களும் தோல்வியை தழுவியதை தொடர்ந்து தமிழில் திரிஷாவுக்கு இருந்த மார்க்கெட் சரிந்தது, மேலும் இதன் பின்பு திரிஷா நடிப்பில் வெளியான அடுத்தடுத்து படங்கள் சரிவர போகவில்லை, இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் தன்னை முன்னிருந்த தனக்கு நெருக்கமாக நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜயிடம் தொடர்ந்து அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்புகள் கேட்டு வந்துள்ளார், கில்லி, திருப்பாச்சி படம் வெளியான பொழுது விஜய்- திரிஷா ஜோடி வெற்றி கூட்டணி என தமிழ் சினிமாவில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், விஜய் – திரிஷா இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்ததும் குறிப்பிடதக்கது.

அதன் அடிப்படையில் மீண்டும் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் தனது மார்க்கெட் உயர்ந்து ஒரு ரவுண்டு தமிழ் சினிமாவில் வந்துவிடலாம் என எதிர்பாத்திருந்த திரிஷாவை கண்டுகொள்ளவே இல்லை விஜய் என கூறப்படும் நிலையில், இதனால் விஜய் மீது நம்பிக்கையுடன் காத்திருத்த நடிகை திரிஷாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இதன் பின்பு நடிகர் அஜித் உதவியை நாடியுள்ளார் நடிகை திரிஷா.

அஜித் உடன் திரிஷா ஜோடியாக நடித்த ஜி, கிரீடம் ஆகிய படங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும், த்ரிஷாவுக்கு மீண்டும் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க அஜித் முன் வந்தாலும், அஜித்துக்கு நெருக்கமானவர்கள் திரிஷா உங்களுடன் ஜோடி சேர்ந்தால் அது ராசியில்லாத படமாக அமைந்துவிடுகிறது, மேலும் தற்போது மார்க்கெட் இழந்த திரிஷாவை எதற்கு உங்கள் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அஜித்திடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் திரிஷாவுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் மங்காத்தா படத்தில் தன்னுடன் ஜோடியாக நடிக்க வைத்தார் நடிகர் அஜித், இந்த படம் மிக பெரிய வெற்றியை கொடுத்து திரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் மறுவாழ்வு கொடுத்த நிலையில், என்னை அறிந்தால் படத்தில் மீண்டும் தனக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் அஜித், இந்த படமும் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணி மனைவி – சினேகன் இடையே விரிசல்..! சலித்து விட்டதா சினேகனுக்கு திருமண வாழ்க்கை.?