ஏ ஆர் ரகுமான் தவறான பாதைக்கு செல்ல யார் காரணம்.. கண்டிக்க அம்மா இல்லாத தைரியம்…

0
Follow on Google News

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவருடைய மனைவி சாய்ரா பானு இருவரும் கடந்த 29 வருட இல்லாத வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து பிரிவதாக அறிவித்துள்ளது, நிச்சயம் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு நெருடளான சம்பவம் நடைபெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாகவே சினிமா துறையில் இருக்கக்கூடியவர்கள் விவாகரத்துக்கு முக்கிய காரணம் சினிமா துறையைச் சார்ந்த சக நடிகைகளுடன் ஏற்படும் கிசுகிசுக்கள் தான்.

மேலும் இப்படி நடிகைகளுடன் ஏற்படும் நெருக்கம் காரணமாக சம்பந்தப்பட்ட அந்த சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் குடும்பத்தை விட்டு வெகு தொலைவு செல்லும் பொழுது, கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஒரு இடைவேளை ஏற்படுத்தி அதுவே கருத்து வேறுபாடாக உருவெடுத்து கணவன் மனைவி பிரிவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு சினிமா துறையைச் சார்ந்தவர்களும் நடிகர் மம்மூட்டியை பின்பற்றினால் நிச்சயம் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது, காரணம் நடிகர் மம்முட்டி எங்கே சென்றாலும் அவர் மனைவியை கூடவே அழைத்துச் செல்லக் கூடியவர், வெளிநாடு சென்றாலும் கூட. அதே நேரம் கேரளாவில் படப்பிடிப்பு நடந்தால் மாலை ஆறு மணிக்கு மேல் சூட்டிங்கில் இருக்க மாட்டார்.

எனக்குன்னு ஒரு குடும்ப இருக்குப்பா என்று ஆறு மணிக்கு மேல் குடும்பத்துடன் நேரம் செலவிட சென்று விடுவார் மம்மூட்டி. இதுதான் இன்றளவும் மம்மூட்டி குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் என்று சொல்லலாம். அப்படி இருக்கும் பொழுது ஏ ஆர் ரகுமான் சமீபகாலமாக பிரம்மாண்ட ஸ்டுடியோ அம்மாவுக்கு நினைவு மண்டபம் என்று மிகப்பெரிய அளவில் பிசியாக இருந்து வருகிறார்.

மேலும் இரவு நேரங்களில் இசை அமைக்கவே பெரும்பாலான இசையமைப்பாளர்கள் விரும்புவார்கள், இதற்கு காரணம் அமைதியான சூழல். அப்படி ரகுமான் குடும்பத்திடம் நேரம் செலவிடுவதை விட இசைக்காக நேரம் செலவிடுவது தான் அதிகம். அதிலும் இரவு நேரங்களில் அவர் விரும்பி இசை அமைக்கக்கூடியவர். கடந்த ஒரு வருட காலமாகவே ஏ ஆர் ரகுமான் மும்பை, துபாய், லண்டன் என தன்னுடைய ஸ்டூடியோவில் ரொம்ப பிசியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழலில் சென்னையில் உள்ள தன்னுடைய மனைவியிடம் நேரம் செலவிடுவது இல்லை என கூறப்படுகிறது.

இதுவே இவர்கள் இருவருக்கும் இடையிலான ஒரு விரிசலை உருவாக்கி ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவர் என்ன செய்கிறார் என்று கூட தெரியாமல் ஒரு குழப்பத்தில் இருந்து வந்துள்ளார் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து சாய்ராபானு ஏ ஆர் ரகுமானை விட்டு பிரிவதற்கு முடிவு செய்தார்.

ஆனால் ஏ ஆர் ரகுமான் அம்மா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று கூறுகிறார்கள். காரணம் குடும்பத்தை உயிருடன் இருக்கும் வரை ஏ ஆர் ரகுமானின் தாயார் அவருடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஏ ஆர் ரகுமானும் தாய் சொல்லை தட்டாமல் நடந்திருக்கிறார். அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் குடும்பத்தில் யார் தவறு செய்தாலும் கூட நேருக்கு நேரா கண்டிக்கக் கூடியவர் ஏ ஆர் ரகுமானின் தாயார்.

அவருடைய மகள் சம்பந்தமில்லாமல் ரகுமான் குடும்பத்திற்குள் தலையிட்டால் கூட இது உனக்குத் தேவையில்லாத விஷயம் என்று கண்டிக்க கூடியவர் ஏர் ரஹ்மானின் தாயார். அந்த வகையில் ஏ ஆர் ரஹ்மானுக்கும் அவருடைய மனைவியை சாய்ரா பானுவுக்கும் இடையில் ஒரு சிறு பிரச்சனை தான் இந்த அளவுக்கு ஒரு பிரிவை கொண்டு வந்திருக்கிற தவிர, பலரும் பலவிதமாக பேசக்கூடிய வகையில் ஏ ஆர் ரகுமானுக்கும் வேறு எந்த பெண்ணுக்கும் தொடர்பில்லை என்று மட்டும் நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here