ஆண்ட்ரியா குறித்து கொந்தளித்த சின்மயி… குடிச்சுட்டு வயது வரம்பில்லாமல் இப்படியா.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் பங்கு பெறுவதற்காக நடிகை ஆண்ட்ரியாவை, விழா குழுவினர் அழைத்து வந்துள்ளனர். அப்போது ஆண்ட்ரியாவை காண ரசிகர் கூட்டம் அலைமோதியது. ஆண்ட்ரியா உ..சொல்றியா மாமா ..உ..உ.. சொல்றியா என்ற பாடலை பாடி அங்கிருந்தவர்களை உற்சாக படுத்தினர். இதனை தொடர்ந்து ஆண்ட்ரியா நடனம் ஆட வேண்டும் என அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.

இதற்கு விழா குழுவினரிடம் என்னை நடனம் ஆட வேண்டும் என்று நீங்கள் அழைத்து வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஆண்ட்ரியா. பின்பு கோவா படத்தில் வரும் ஒரு பாடலை பாடினார் ஆண்ட்ரியா. இதற்கும் அங்கிருந்தவர்கள் சமாதானம் ஆக வில்லை, ஆண்ட்ரியா நடனம் ஆட வேண்டும், அப்படியில்லை என்றால், இங்கிருந்து செல்ல முடியாது என கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடம் கோபத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார் ஆண்ட்ரியா.

இது குறித்து பிரபல பின்னணி பாடகி சின்மயி தெரிவித்ததாவது. கோவில் திருவிழா, ஆனால் ஒரு பெண் பாடகிய பயமுறுத்தி தாக்குதல் நடத்துவர் போன்று நடந்து கொள்வதில் கூச்சபடர்தே இல்ல. ரெக்கார்ட் டான்ஸ் எதிர்பாத்தாங்களோ? குடிச்சுட்டு கும்மாளம் போட அதத்தானே கேபானுங்க வயது வறம்பில்லாம? காலங்காலமா அதான் நடந்துட்டு இருக்காமே? என கடுமையாக தனது கோபத்தை வெளிப்படுத்திய சினிமாயி.

மேலும், தமிழ்நாடுன்னா பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைக்காதீங்க. அந்த காலமெல்லாம் எப்பவோ கப்பலேறி போயாச்சு… பாலியல் குற்றவாளிகளுக்கும் பெண்களை அவமதிப்பவர்களுக்கும் பாராட்டும் அங்கீகாரமும் குடுக்கும் அழுகிய கூட்டம் தான் அதிகம். முடிஞ்சா உங்க குழந்தைகளை கூட்டிட்டு கெளம்புங்க. போகப்போக நாசமாபோறதுதான் தெரியுதே தவிர, முன்னேற்றம் அடைகின்ற மாதிரி தெரியல.

இந்த கும்பல் சொன்ன உடனே நடனம் ஆடலைன்னா இங்கெருந்து போக விடமாட்டேன்னாங்களாம். இத விட கேவலமா இந்த ஊர் ஆம்பளைங்களும், மக்களும் நடந்துக்க முடியாது. எந்த கோவில் திருவிழாவோ தெரியல, ஆனா அதே கோவில்ல இருக்கும் தெய்வம் கொஞ்சம் எழுந்து வந்து யாரெல்லாம் இப்படி மிரட்டுனாங்களோ அவங்க எல்லாத்தையும் உடனே வதம் செய்ய வேண்டுகிறேன். பூமி பாரம் குறையும்.

இந்த ஆளுங்கல்லாம் யாருன்னு பாத்து தயவு செய்து உங்க வீட்டு ஆட்களை இவர்களிடம் இருந்து, தூரம் தள்ளி வெய்ங்க. என்ன பண்ணுவாங்களோ தெரியாது. இந்த பாடல் வரிகள் உண்மைதான்னு நிரூபிக்கும் முற்போக்கு திராவிடம் மற்றும் பெண்ணியம் பேசும் பல தமிழ் மக்களின் லட்சணம் இவ்வளவுதான் என்று பாடகி ஆண்ட்ரியாவுக்கு நடந்த இந்த சம்பவத்துக்கு கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார் சின்மயி.

சரண்டரான விஜய்…. ஐயா நீங்க தான் என்னை காப்பாத்தணும்..! எங்கே ..என்ன நடந்தது தெரியுமா.?