அழிவை நோக்கி தமிழ் சினிமா … இன்றைய சினிமா குறித்து முக்கிய பிரபலம் என்ன சொல்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

பிற மொழி சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் தமிழ்நாட்டில் மார்க்கெட் பிடிக்க போட்டி போட்ட காலம் கடந்து, தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்கள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரளா என அண்டை மாநிலத்தில் மார்க்கெட் பிடிக்க போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அதிக வசூலை அள்ளி குவிக்க கூடியது தமிழ் சினிமா தான் என்கிற காலம் மலையேறி தற்பொழுது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கடனாளியாக வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்திய அளவில் தமிழ் சினிமாவை தலைநிமிர செய்த்தவர்களில் மணிரத்தினம், சங்கர் ஆகிய இரண்டு இயக்குனர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் இவர்களில் மணிரத்தினம் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான கண்ணத்தில் முத்தமிட்டால் படம் தான் இவர் கொடுத்த கடைசி வெற்றி. அதே போன்று பிரமாண்ட இயக்குனர் என வலம் வந்த சங்கர், பாகுபலி படம் வெளியான பின்பு அவர் வைத்திருந்த பிரமாண்டம் என்கிற பட்டத்தை தட்டிப்பறித்து சென்றுவிட்டார் தெலுங்கு பட இயக்குனர் ராஜமௌலி.

சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படம் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளி குவிக்கிறது. அதே போன்று கர்நாடக நடிகர் நடிப்பில் வெளியான KGF படத்தை தமிழகத்தில் வெளியிட்ட திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் தவித்து கொண்டிருக்கிறனர். இப்படி மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் படைப்பில் வெளியாகும் படங்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதே வேலையில் தமிழில் முன்னனி நடிகர்கள் படங்கள் தமிழ்நாட்டில் தோல்வியை தழுவி வருகிறது. இது குறித்து தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் கூறுகையில். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் பார்த்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை விஜய் கொடுத்துள்ளார்.தொடர்ந்து விஜய் நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்து வருவது பயமாகவும் இருக்கிறது, இனிமேல் தான் பயங்கரமாகவும் இருக்கும் என கிண்டல் செய்துள்ள பேராசிரியர்.

மேலும், பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் படைப்புகள் கதை சொல்கிறது அதனால் அந்த படங்கள் தமிழகத்திலும் வெற்றியை பெறுகிறது. ஆனால் தமிழ் படங்களில் மட்டுமே கடந்த சில வருடங்களாக ஹீரோக்கள் கதையே இல்லாத படத்தில் கருத்துக்கள் மட்டும் பேசி வருகின்றனர். தமிழக மக்கள் உங்களிடம் கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை என்பதை உங்கள் படங்கள் தொடர்ந்து சமீபத்தில் தோல்வி அடைந்து வருவதில் உணர முடிகிறது.

மேலும் RRR படம் வெளியாவதற்கு முன்பு தமிழகத்தில் நடந்த அந்த படம் குறித்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, தமிழ் நடிகர் , இந்தி நடிகர், தெலுங்கு நடிகர் என்று கிடையாது அனைவரும் இந்திய சினிமா நடிகர்கள் என பேசினர். அதே போன்று KGF படத்தின் கதாநாயகன் தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சினிமா, கர்நாடக சினிமா, இந்தி சினிமா என்று பிரித்து பார்க்க வேண்டாம், அனைத்துமே இந்திய சினிமா தான் என்று தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக பேசிய இவர்களை தமிழக மக்கள் ஏற்று கொண்டு அவர்கள் படத்தை வெற்றி அடைய செய்துள்ளதையும் சுட்டி காட்டி இனி மேலாவது தமிழக மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தமிழ் சினிமா துறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன்.

பீஸ்ட் படு மொக்கை… கதறும் விஜய் ரசிகர்கள்..! நெல்சன் இப்படியா விஜய் அண்ணாவ வெச்சு செய்வார்.!