உபியில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்த சீப்பு செந்தில்..! என்ன வியூகம் தெரியுமா.? சிரிக்காமல் உள்ளே சென்று பாருங்கள்..

0
Follow on Google News

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பத்திரிகையாளர் செந்தில் பேசுகையில், நாம் தமிழ்நாட்டில் இருந்து ஒரு முடிவு எடுக்கின்றேன் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று சேர்ந்து உரக்கச் சொல்கிறது எங்களுக்கு நீட் வேண்டாம் என்று, ஆனால் நீட்தேர்வு நடக்கின்றது, தமிழகம் நீட் தேர்வு வேண்டாம் என்று புறக்கணித்த ஒன்றை தமிழ்நாட்டில் நடக்கின்றது என்றால் அதற்கு காரணம் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள்.

இந்த நான்கு மாநிலங்களில் அவர்கள் வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவர்கள் வைத்தது தான் சட்டம், அப்ப இந்த நிலைமையே கேவலமான நிலைமை, இந்த அமைப்பு முறை மாற வேண்டுமா.? இல்லையா.? அது ஒரு பெரிய வேலை. இந்த அமைப்பு முறை மாறுவதற்கு நீண்ட காலம் ஆகும். அப்படியானால் முதலில் எதை மாற்ற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் உத்தரபிரதேச, பீகார், மத்திய பிரதேசத்தில் இருப்பவர்களை மாற்ற வேண்டும்.

அவர்களை ஒரு நோய் ஆட்டிப்படைக்கிறது, மதவாதம் என்னும் நோய்க்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் மருந்து இல்லை, அந்த மருந்து தமிழகத்தில் தான் இருக்கின்றது, அது சமூக நீதி என்னும் மருந்து. அந்த மருந்தைத் தந்த மருத்துவர் தந்தை பெரியார். இன்னைக்கும் இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கின்றது.

ஆகையால், நீ இந்த மருந்தை சாப்பிட வில்லை என்றால் சிக்கல்தான் என்று சொல்லி இந்த மருந்தை அங்கே இருபவர்களுக்கு கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் இடத்திற்கு வந்துவிட்டோம். வேறு வழியில்லை அவன் ஓட்டை போட்டு விடுகிறான் நம்ம சிரமப்பட வேண்டியது இருக்கு.

உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பெரும் சிக்கலாக அமைந்துவிடும், அப்படியானால் உத்தரப் பிரதேச தேர்தலில் எப்படியாயினும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கங்கை நதியிலே டென்ட் போட்டு விட்டார் பிரதமர் மோடி. ஆகையால் அங்கே உத்தரபிரதேசத்தில் இருக்கும் சிறுபான்மை மக்களிடம் இங்கிருந்து நாம் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என செந்தில் பேசியது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது