பைக் மற்றும் நகைகளை ஏமாற்றிச் சென்ற காதலர்… பிக்பாஸ் ஜூலி புகார்!

0
Follow on Google News

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் ஜூலி. 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவில் நடந்த போது கவனம் ஈர்த்தவர்களில் ஜூலியும் ஒருவர். அதன் பின்னர் அவர் பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்து கொண்டு தனது இமேஜை டோட்டல் டேமேஜ் ஆக்கிக் கொண்டார்.

ஆனாலும் அவரின் பிரபல்யம் அதிகமாகிக் கொண்டே சென்றது. அதையடுத்து சில குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் துண்டு துக்கடா வேடங்களிலும் தலைகாட்டினார். அதன் பின்னர் அட்ரஸ் இல்லாமல் போன அவர் இப்போது மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

இப்போது சென்னை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் மனிஷ் என்பவர் தன்னைக் காதலித்து ஏமாற்றி பைக் மற்றும் தங்க நகைகளை ஏமாற்றி விட்டதாக புகாரளித்துள்ளார். இது சம்மந்தமாக வழ்ககுப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.