இது திராவிட மண் அல்ல தமிழ் மண்..! வேல் யாத்திரை ஒராண்டு நிறைவு தினம்…பேராசிரியர் சிறப்பு பேட்டி..!

0
Follow on Google News

கந்த சஷ்டி கவசத்தை இழிவு செய்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தமிழகம் முழுவதும் நடத்திய வேல் யாத்திரையின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் நமது தினசேவல் நியூஸ்க்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்ததாவது.

இன்று வேல் யாத்திரையின் ஓராண்டு நிறைவு நாள், வேல் யாத்திரை தமிழகத்தில் ஏற்பட்ட ஒரு புரட்சிகரமான அரசியல் மாற்றம். அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் கையில் வேல் எடுத்து தமிழகம் முழுவதும் ஆறுபடைவீடுகளில் யாத்திரை நடத்தி, திருச்செந்தூரில் நிறைவு செய்த இந்த யாத்திரை. ஆன்மிக விழா என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர்.தமிழகத்தில் இதுபோன்று காவடி, வேல் வைத்துக்கொண்டு யாத்திரை செய்வது நூறாண்டுகளாக இருக்கும் பழக்கம் தான்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சி நடத்திய வேல் யாத்திரையின் பின்னால் ஆன்மீகம் தாண்டியும் ஒரு தேசிய நோக்கம் இருக்கின்றது. தமிழ் கடவுள் முருகன் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார், கந்தசஷ்டி அவமதிக்கப்படுகிறது, இதை கண்டும் காணாமல் இருக்கக்கூடிய தமிழக அரசாங்கம், இதை எதிர்த்து பேசாத தமிழ் ஊடகங்கள், தமிழர்கள் மனம் புண்படும் போது அதை பாராமுகமாக பார்க்க கூடிய சில அரசியல் கட்சிகள்.

இவற்றிக்கு நடுவில் தமிழ் கடவுள் முருகனையும், தமிழர்கள் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அவமதிக்கும் போக்கை அனுமதிக்க முடியாது என்பது தான் வேல் யாத்திரையின் நோக்கம். அதில் முழு வெற்றி கண்டுள்ளது பாஜக. அதை பொருத்தமான தருணத்தில் எடுத்து, அது ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி அதில் பெரு வெற்றியை கண்டவர் அப்போதைய மாநில தலைவராக இருந்த எல்.முருகன் அவர்கள்.

அதனால் இந்த தருணத்தில் வேல் யாத்திரை ஓராண்டு நிறைவு தினத்தில் பாராட்டுகளை பதிவு செய்கின்றேன். அதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து தமிழகம் முழுவதும் அதை மக்கள் இயக்கமாக மாற்றிய பாரதிய ஜனதா கட்சி அனைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் இந்த தருணத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள், அதை தலைமை ஏற்று நடத்திய அப்போதைய மாநிலத் தலைவர் தற்போதைய மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்கள் இந்த இடத்தில் போற்ற தகுந்தவராக பார்க்கின்றேன்.

இது மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை எதிர்காலத்திலும் உருவாக்கும். வேல் யாத்திரை விதைத்து சென்ற அந்த விதை தமிழக அரசியலில் தொடர்ந்து வேலை செய்யும். இது திராவிட மண் அல்ல தமிழ் மண், அதனால் இப்போது திராவிடம் என்கின்ற சிந்தனையை முற்றிலுமாக மறைந்து வரும் நிலையில் திமுகவே மன்னிப்புக் கேட்கும் வகையில் திராவிடத் தத்துவத்தை பேசி வரும் நிலையில், இந்த வேல் யாத்திரை தமிழ் பண்பாடு இந்து பண்பாட்டில் தான் ஊறி திளைத்து உள்ளது என்பதையும் இந்திய தேசிய உணர்வையும் தமிழ் பற்றையும் வளர்க்கின்ற ஒரு யாத்திரையாக அமைந்துள்ளது என்பதுதான் வேல் யாத்திரையின் சிறப்பு என பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.