தேமுதிக வுக்குப் புதுத்தலைவர்… முழு அதிகாரத்தையும் கைப்பற்றும் பிரேமலதா!

0
Follow on Google News

தேமுதிக கட்சிக்கு புதிய தலைவராக பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு தமிழகத்தின் எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தை அலங்கரித்தது தேமுதிக. ஆனால் அதன் பின்னர் அக்கட்சிக்கு மிகப்பெரிய வீழ்ச்சியாக அமைந்தது.

இப்போது தமிழக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு கட்சியாகவே உள்ளது. இதற்கு மிக முக்கியமானக் காரணம் தேமுதிகவின் முகமாக இருந்த விஜயகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட நலிவுதான் காரணம். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகள் வரை சென்று சிகிச்சைப் பெற்ற விஜயகாந்த் இப்போது வீட்டில் ஓய்வில் உள்ளார்.

கட்சி பணிகளை எல்லாம் இப்போது பொருளாளராக இருக்கும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் தம்பி சுதீஷ் ஆகியோர்தான் பார்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் இப்போது பிரேமலதா தேமுதிகவுக்கு முழுநேர தலைவராகி கட்சியின் முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்னொரு தரப்பில் கலைஞருக்கு உடல்நலம் குன்றிய போது ஸ்டாலின் செயல் தலைவராக செயல்பட்டது போல பிரேமலதா செயல் தலைவராக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.